பிறப்பு | மொண்ட்ரியால், கியூபெக், கனடா | அக்டோபர் 8, 1912
---|---|
இறப்பு | நவம்பர் 23, 1969 லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் | (அகவை 57)
தேசியம் | கனடாவைச் சேர்ந்தவர் |
துறை | இயற்பிய கரிம வேதியியல் |
நிறுவனம் | UCLA |
அறியப்பட்டது | வின்ஸ்டீன் வினை கிரன்வால்ட்–வின்ஸ்டீன் சமன்பாடு மரபுசாரா நேரயனி ஆன்கிமெரிக் அசிஸ்டென்ஸ் |
பரிசுகள் | தூய வேதியியலில் ஏசிஎஸ் விருது (1948) அறிவியலுக்கான தேசிய விருது (1970) |
சால் வின்ஸ்டீன் (Saul Winstein) (அக்டோபர் 8, 1912 – நவம்பர் 23, 1969) ஒரு யூத கனடிய வேதியியலாளர் ஆவார். இவர் வின்ஸ்டீன் வினையை கண்டுபிடித்தார். நோர்போர்னைல் நேரயனியின் நிலைத்தன்மையை விளக்குவதற்கு மரபுசாரா நேரயனி தேவை என்று வாதிட்டார். [1] ஹெர்பர்ட் சி. பிரவுனுடன் σ- இடமாற்றம் செய்யப்பட்ட கார்போநேரயனிகளின் இருப்பு பற்றிய விவாதத்தைத் தூண்டியது. நெருக்கமான அயனி இணை என்ற கருத்தையும் வின்ஸ்டீன் முதலில் முன்மொழிந்தார். [2] இவர் கிரன்வால்ட்-வின்ஸ்டீன் சமன்பாட்டின் இணை ஆசிரியராக இருந்தார். இது கரைப்பானாற்பகுப்பு விகிதங்கள் பற்றியது. [3]
ரிச்சர்டு எஃப் கெக், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் வின்ஸ்டீனுடன் முதுகலை படிப்பை மேற்கொண்டார் , வேதியியலுக்கான 2010 நோபல் பரிசை வென்றார். [4]