சால்லி ஓயே (Sally Oey) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிச்சிகான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் பெரும்பொருண்மை வெம்மீன்களின் ஆய்வாளர் ஆவார். இவை மீவிண்மீன் வெடிப்புக்கு முந்தைய கட்ட விண்மீன்களாகும். இவர் 1999 இல்; அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்[1] இவர் 2006 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் 206 ஆம் கூட்ட உரையாற்ர அழைக்கப்பட்டார்.
இவர் இப்போது பேராசிரியராக உள்ளார்.[2] இவர்ஜெமினி வான்காணகத்தின் குழுவுறுப்பினராக உள்ளார். இவர் 2001 இல் இருந்து 2004 வரை உலோவல் வான்காணக உதவி வானியலாளராக இருந்தார். மேலும், 1998 முதல் 2001 வரை விண்வெளித் தொலைநோக்கி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இவரது ஆராய்ச்சிக் குழுவாகிய அண்மைப் பால்வெளிகளின் பின்னூட்டச் செயல்பாடு (FANG) களக்கொத்திலும் பெரும்பால்வெளியிலும் அண்டவெளியிலும் பெரும்பொருண்மை விண்மீன்கள் நிலவும் பின்னூட்டத்தை உடுக்கணவெளிக்கும் பால்வெளியிடை ஊடகத்துக்கும் அனுப்புவதில் கவனம் குவிக்கிறதுe. இந்தப் பின்னூட்டங்கள் பின்வருமாறு:
ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பலகலைக்கழகத்தில் ஓயேவும் அவரது கூட்டாளிகளும் 200 சுரியப் பொருண்மைக்கு மேலாக எந்தவொரு விண்மீனும் அமையவில்லை என்பதைக் கண்டறிந்தபின் அதற்கான சான்றுகளை நமது பால்வழியின் பிறவிண்மீன்கொத்துகளிலும் பாவழிஅயைச் சற்றிவரும் துணஇப்பால்வெளியாகிய மெகல்லானிக் முகில்களிலும் கண்டுபிடித்தனர். "அன்னல் இந்த வரம்பு விண்மீனாக்க இயற்பியலால் அமைகிறதா அல்லது விண்மீனாக்க வளிம உருவளவால் அமைகிறதா என்பது தெளிவாகவில்லை. தொடக்கநிலைப் புடவியில் 500 சூரியப் பொருண்மை பேரளவு விண்மீன்கள் நிலவியிருக்கலாம்" என ஓயே கூறுகிறார்.[4]