சாவித்திரி குணசேகரா
| |
---|---|
தேசியம் | இலங்கை |
விருதுகள் | ஃபுக்குவோக்கா பரிசு |
சாவித்திரி குணசேகரா (Savitri Goonesekere) இலங்கையைச் சேர்ந்த ஒரு சட்ட வல்லுநர் மற்றும் கல்வியாளர் [1] ஆவார். இவர் குழந்தைகளின் உரிமைகள் குறித்த பன்னாட்டு நிபுணர்.
சாவித்திரி குணசேகரா கொழும்பில் உள்ள மகளிர் கல்வியில் பட்டப்படிப்பினை முடித்தார். 1961ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பினை முடித்து 1962ஆம் அண்டு ஹார்வர்டு சட்டப்பள்ளியில் சட்டப்படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[2]
1983-ல் இலங்கை திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் சட்டப் பேராசிரியை குணசேகரே ஆவார். இவர் 1999 முதல் 2002 வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக [3] பணியாற்றினார். பின்னர் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றிய ஆய்வின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
சிறந்த எழுத்தாளரான குணசேகரே இலங்கையில் நவீன சட்டக் கல்வியின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். குடும்பச் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்த இவரது படைப்புகள் பின்வருவன: இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்: கடந்த காலத்திலிருந்து கற்றல் (ILO:1993); குழந்தைகள், சட்டம் மற்றும் நீதி: ஒரு தெற்காசியக் கண்ணோட்டம் (சேஜ்: 1998); தெற்காசியாவில் வன்முறை, சட்டம் மற்றும் பெண்களின் உரிமைகள் என்ற ஆசிரியராகவும் (சேஜ்:2004).