சாவீர கம்பத கோயில் | |
---|---|
சாவீர கம்பத கோயில், கர்நாடகா | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மூதாபித்திரி, தெற்கு கன்னடம் மாவட்டம், கர்நாடகா |
புவியியல் ஆள்கூறுகள் | 13°04′27.3″N 74°59′51.5″E / 13.074250°N 74.997639°E |
சமயம் | சமணம் |
இணையத் தளம் | www |
சாவீர கம்பத கோயில் அல்லது திருபுவன திலக சூடாமணி கோயில் (Saavira Kambada Temple) (கன்னடம்: ಸಾವಿರ ಕಂಬದ ಬಸದಿ Sāvira Kambada Basadi) or Tribhuvana Tilaka Cūḍāmaṇi (சமக்கிருதம்: त्रिभुवन तिलक चूडामणि), சமண சமய வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் ஆயிரம் தூண்களைக் கொண்டுள்ளதால், இதனை ஆயிரம் தூண் கோயில் என்பர். இக்கோயில் கிபி 1430ல் விஜயநகர பேரரசின் தேவராயரால் கட்டப்பட்டது.
இச்சமணக் கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின், தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள மூதாபித்திரி எனும் ஊரில் அமைந்துள்ளது. மங்களூரு நகரத்திலிருந்து வடகிழக்கில் 34 கிமீ தொலைவில் இச்சமணக் கோயில் உள்ளது.[1]
இக்கோயில் சமண சமயத்தின் 8வது தீர்த்தங்கரர் சந்திரபிரபாவிற்கு அர்பணிக்கப்பட்டதால், இக்கோயிலை சந்திரநாதர் கோயில் என்றும் அழைப்பர். சந்திரபிரபாவின் எட்டு அடி உயரச் சிலை இக்கோயில் சன்னதியில் வைத்து வழிபடப்படுகிறது.[2] இக்கோயிலின் 60 அடி உயர கருங்கல்லான மானஸ்தம்பம் (கொடி மரம்) புகழ் பெற்றது.[3]
மூதாபத்திரி ஊரில் உள்ள 18 சமணக் கோயில்களில், சாவீர கம்பத கோயில் மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோயில் எனக்கருதப்படுகிறது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)