சாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின்ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். பழைமையான இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
↑டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.