சாத்திரப் பிரமாணம் (Śāstra pramāṇam in Hinduism) இந்து சமயத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரியான அறிவைத் தரும் கருவி எனப்பெயாராகும். புருஷார்த்தம் (மனிதர்களின் குறிக்கோள்கள்) , தருமம் (சரியான நடத்தை), அர்த்தம் (வாழ்க்கைகான பொருள் ஈட்டல்), காமம் (இன்பம்) மற்றும் வீடுபேறு (மோட்சம்) பற்றிய அறிவுகள் சுருதி எனப்படும் வேதங்கள் விளக்குகிறது.. ஸ்மிருதி : எனப்படும் பகவக் கீதை மற்றும் தர்ம சாஸ்திரம்ங்களான, இதிகாசங்கள், புராணங்கள், ஆச்சாரம் (நல்ல பழக்கம்), மற்றும் ஆத்மஸ்துதி ("தன்னைப் பிரியப்படுத்துவது") ஆகியவற்றுடன் சேர்ந்து. இது பிரமாணத்தையும் (அறிவின் பொருள்) மற்றும் ஆதாரங்களையும் வழங்குகிறது. சனாதன இந்து தர்மம், தத்துவம், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களில் வெளிப்படுத்தப்படுகிறது..
முதல் இரண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத ஞான ஆதாரங்கள் (பிரமாணம்), ஸ்ருதிப் பிரமாணம் மற்றும் ஸ்மிருதி பிரமாணம் ஆகியவைகள் இறுதி அல்லது உச்ச அதிகாரத்தை வைத்துள்ளது.
பிரமாணம் என்பது "ஆதாரம்" என்று பொருள்படும், மேலும் இது இந்திய தத்துவத்தின் ஒரு கருத்து மற்றும் துறையாகும். இந்த கருத்து சமஸ்கிருத வேர்களில் இருந்து பெறப்பட்டது, பிர (प्र), "வெளிப்புறம்" அல்லது "முன்னோக்கி" என்று பொருள்படும். மா (ma). பிரமா என்பது "சரியான கருத்து, உண்மையான அறிவு, அடிப்படை, அடித்தளம், புரிந்துகொள்வது" என்று பொருள்படும். .[1][2].[3] எனவே பிரமாணம் என்பது "உண்மையான அறிவைத் தரும் கருவி என்பதைக் குறிக்கிறது.[4]
சாஸ்திரப் பிரமாணம் என்பது பகவத் கீதை அத்தியாயம் 16, சுலோகம் 24ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, வேத சாஸ்திரங்களுக்கான அதிகாரத்தைக் குறிக்கிறது, அங்கு கிருஷ்ணர், அருச்சுனனுக்கு வேதத்தின் அதிகாரத்தைப் பின்பற்றும்படி கட்டளையிடுகிறார்:[5]
என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் வேதங்கள் உங்கள் அதிகாரமாக (பிரமாணம்) இருக்கட்டும். வேத கட்டளைகள் மற்றும் போதனைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப இவ்வுலகில் உங்கள் செயல்களைச் செய்யுங்கள்
சுருதி, ஸ்மிருதி, ஆச்சாரம் மற்றும் ஆத்மதுதி ஆகியவை பவிசிய புராணம், பிரம்ம பர்வம், அத்யாயாயம் 7 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, பாரம்பரிய இந்து தர்மத்தின் நான்கு ஆதாரங்களாகும்.
போதாயனர், பராசரர், வேதவியாசர், கௌதமர், வசிஷ்டர், ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் , மனுதரும சாத்திரம் , மற்றும் யாக்யவல்க்கியர் போன்ற வேத கால முனிவர்கள் இந்தக் கருத்தைத் தங்கள் படைப்புகளில் கடைப்பிடித்துள்ளனர்.
வேதங்களால் நிராகரிக்கப்பட்ட இந்தியத் தத்துவத்தின் முக்கியப் பள்ளிகள் நாஸ்திக தத்துவங்களாக கருதப்பட்டது.
அறிவைத் தரும் கருவிகளில் (பிரமாணம்) முதன்மையானதும், இறுதியானது சுருதி ஆகும். சுருதிக்கு ஆசிரியர் எவரும் இல்லை. அவை தலைமுறைகளுக்கு வாய்மொழியாக கடத்தப்பட்டு நிலையானவை.[14 ] ஸ்மிருதி என்பது இரண்டாம் நிலைப் படைப்பாகும், மேலும் இது இந்து சமயத்தில் சுருதியை விட குறைவான அதிகாரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
{{cite book}}
: |work=
ignored (help)