சி. மு. ரமேஷ் | |
---|---|
ஆந்திரப் பிரதேசத்தின் சார்பில் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | துல்ல தேவேந்தர் கௌட் |
தொகுதி | ஆந்திரப் பிரதேசம் |
தெலங்காணா சார்பில் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2 மே 2014 – 2 ஏப்ரல் 2018 | |
பின்னவர் | ஜோகினப்பள்ள் சந்தோஷ் குமார் |
தொகுதி | தெலங்காணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொட்லதுர்த்தி கிராமம், கடப்பா மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (2019 வரை) |
துணைவர் | சிறீதேவி ரமேசு |
பிள்ளைகள் |
|
இணையத்தளம் | [1] |
சிந்தகுண்டா முனுசாமி ரமேஷ் (Chintakunta Munuswamy Ramesh) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மற்றும் தொழிலதிபரும் ஆவார்.[1]
இவர் பாஜகவின் பொதுக் கணக்குக் குழு உறுப்பினராகவும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2018 இல் இரண்டாவது முறையாக மாநிலங்கவை உறுப்பினரானார்.[2][3] இவர் வெலமா சமூகத்தைச் சேர்ந்தவர்.[4]
ரமேஷ், ரித்விக் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடந்தி வருகிறார். நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. அது 14 ஆண்டுகளில் 1000 கோடிகளுக்கு மேல் விற்றுமுதலாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனத்தில் ஒன்றாகும். மேலும் ஆற்றல், சாலைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் சொத்து மேம்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளது.[2][3]
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014ன் ஒரு பகுதியாக கடப்பாவில் எஃகு ஆலை அமைக்கக் கோரி ரமேஷ் 2018 ஜூன் 20 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஜூன் 26ஆம் தேதி உண்ணாவிரத முகாமுக்கு வருகை தந்து, தான் சார்ந்த திமுக கட்சியின் சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.[5]