சி. ராமச்சந்திரா | |
---|---|
1949 இல் சி. ராமச்சந்திரா | |
பிறப்பு | ராம்சந்திரா நர்கர் சித்தல்கர் 12 சனவரி 1918 புன்தம்பா, அகமது நகர் மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 5 சனவரி 1982 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 63)
மற்ற பெயர்கள் | சி. ராமச்சந்திரா, சித்தால்கர், அன்னா சாகிப் |
பணி | திரை இசை இயக்குநர் இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1935 – 1971 |
இராம்சந்திரா நர்கர் சித்தல்கர் (Ramchandra Narhar Chitalkar) (12 ஜனவரி 1918 - 5 ஜனவரி 1982), சி. ராம்சந்திரா அல்லது சித்தால்கர் அல்லது அன்னா சாகிப் என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய இசை இயக்குனரும் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார். [1] [2]
ஓர் இசையமைப்பாளராக, இவர் பெரும்பாலும் சி. ராம்சந்திரா என்ற பெயரைப் பயன்படுத்தினார். இருப்பினும் சிலபடங்களில் அண்ணா சாகிப், ராம் சித்தால்கர் மற்றும் சியாமு என்ற பெயரையும் பயன்படுத்தினார். மேலும், ஆர். என். சிதால்கர் என்ற பெயரில் மராத்தித் திரைப்படங்களில் அடிக்கடி பாடி நடித்தார். இடையிடையே பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கைக்கு இவர் தனது குடும்பப்பெயரான சித்தால்கர் மட்டுமே பயன்படுத்தினார். ஆசாத் (1955) திரைப்படத்தில் "கிட்னா ஹசீன் ஹை மௌசம்" மற்றும் அல்பேலா (1951) படத்தில் "ஷோலா ஜோ பட்கே" போன்ற புகழ்பெற்ற சில பாடல்களை பாடகி லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடியுள்ளார்.[2]
கவிஞர் பிரதீப் எழுதி லதா மங்கேஷ்கர் பாடிய " ஏ மேரே வதன் கே லோகன் " என்ற மிகவும் பிரபலமான தேசபக்தி பாடல் ராம்சந்திராவின் இசையமைப்பில் வெளிவந்தது. [3] பின்னர் 1963 குடியரசு தினத்தன்று புதுதில்லியில் உள்ள தேசிய மைதானத்தில் ஜவகர்லால் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர் அவர்களால் நேரடியாகவும் நிகழ்த்தப்பட்டது. பாடலைக் கேட்ட ஜவகர்லால் நேரு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் அவரது கண்ணில் கண்ணீர் வந்தது.[2] 27 ஜனவரி 2014 அன்று, லதா மங்கேஷ்கருக்கு இந்தப் பாடலின் 51வது ஆண்டு நினைவாக மும்பையில் குசராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சி. ராம்சந்திரா தனது 64வது பிறந்தநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 5 ஜனவரி 1982 அன்று இந்தியாவின் மும்பையில் இறந்தார். [2]