தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | சீனர் |
பிறப்பு | 17 அக்டோபர் 1997 இலுவோயங், சீனா |
வசிப்பிடம் | சாங்ஷா, சீனா |
உயரம் | 1.58m |
விளையாட்டு | |
நாடு | ![]() |
விளையாட்டு | இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் தடகளம் |
மாற்றுத்திறன் வகைப்பாடு | டி 36 வகை |
சி யிட்டிங் (Shi Yiting) (பிறப்பு:1997 அக்டோபர் 17) இவர் ஓர் சீன மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரராவார் . இவருக்கு இடது கையில் தசை இயக்கத்தில் குறைபாடும், தனது இரு கால்களிலும் வெவ்வேறு நீளங்களையும் கொண்டுள்ளார். [1] [2]
சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவரது சர்வதேச அறிமுகமானது, இரியோ டி செனீரோவில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 2016 ஆம் ஆண்டிலிருந்து, 200 மீட்டர் டி 36 பிரிவில் மாற்றுத் திறனாளி வெற்றியாளனானார்.
2017 ஆம் ஆண்டில் இவர் இலண்டனில் நடந்த சர்வதேச இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 200 மற்றும் 100 மீட்டர் டி 36 வகையில் தங்கப்பதக்கம் வென்றார், பிந்தைய பந்தயத்தில் இவர் புதிய உலக சாதனை படைத்தார். 2019 ஆம் ஆண்டில் துபாயில் நடந்த இணை ஒலிம்பிக் போட்டிகளில் உலக அனுபவத்தை இவர் பிரதிபலித்தார்: இங்கேயும் ஒரே சிறப்புகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார், 200 மீட்டர் டி 36 வகையில் புதிய உலக சாதனை படைத்தார்.