சிக் (P013) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Sik (P013) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் சிக் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | சிக் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | சிக் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சிக் மாவட்டம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் தர்மிசி சுலைமான் (Ahmad Tarmizi Sulaiman) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 63,126[1][2] |
தொகுதி பரப்பளவு | 1,645 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
சிக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sik; ஆங்கிலம்: Sik Federal Constituency; சீனம்: 植联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், சிக் மாவட்டத்தில் (Sik District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P013) ஆகும்.[4]
சிக் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து சிக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), ஜெராய் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
கெடா மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சிக் மாவட்டம் கருதப்படுகிறது. இதன் பரப்பளவு 1635 சதுர கி.மீ.; கெடா மாநிலத்தில் 17.35% பரப்பளவு கொண்டது. அதாவது பெர்லிஸ் மாநிலத்தைப் போல இரு மடங்கு அளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டம் ஆகும்.
இந்த மாவட்டத்தின் வடமேற்கில் பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District), வடக்கே தாய்லாந்து நாடு, தெற்கே பாலிங் மாவட்டம் (Baling District), தென்மேற்கில் கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மேற்கில் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகியவை எல்லைகளாக உள்ளன.
சிக் மாவட்டம் 3 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பாலிங் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
7-ஆவது | 1986–1990 | சைனோல் அபிடின் ஜொகாரி (Zainol Abidin Johari) |
பாரிசான் (அம்னோ) |
8-ஆவது | 1990–1995 | அப்துல் அமீது உத்மான் (Abdul Hamid Othman) | |
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | சானோன் அகமது (Shahnon Ahmad) |
பாஸ் |
11-ஆவது | 2004–2008 | வான் அசுமி வான் அரிபின் (Wan Azmi Wan Ariffin) |
பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | சே உடா சே நிக் (Che Uda Che Nik) |
பாஸ் |
13-ஆவது | 2013–2018 | மன்சுர் அப்துல் ரகுமான் (Mansor Abd Rahman) |
பாரிசான் (அம்னோ) |
14-ஆவது | 2018–2020 | அகமத் தர்மிசி சுலைமான் (Ahmad Tarmizi Sulaiman) |
பாஸ் |
2020–2022 | பெரிக்காத்தான் பாஸ் | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
63,126 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
51,659 | 81.05% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
51,161 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
82 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
416 | - |
பெரும்பான்மை (Majority) |
21,787 | 42.58% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
அகமத் தர்மிசி சுலைமான் (Ahmad Tarmizi Sulaiman) |
பெரிக்காத்தான் | 34,606 | 67.64% | +67.64 | |
மைசதுல் அக்மாம் ஓத்மான் (Maizatul Akmam Othman) |
பாரிசான் | 12,189 | 25.06% | -10.41 ▼ | |
லதீபா முகம்மது யாதிம் (Latifah Mohammad Yatim) |
பாக்காத்தான் | 3,736 | 7.30% | -9.32 ▼ |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N23 | பெலான்டெக் (Belantek) |
மாட் இசா சாபி (Mad Isa Shafie) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N24 | செனரி (Jeneri) |
முகமது சனுசி நூர் (Muhammad Sanusi Md Nor) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)