சிக்கந்தர் சா சூரி | |
---|---|
சிக்கந்தர் சா சூரியின் செம்பு நாணயம் | |
சுர் வம்சத்தின் 6வது சுல்தான் | |
ஆட்சிக்காலம் | பிப்ரவரி 1555 - 22 ஜூன் 1555 |
முன்னையவர் | இப்ராகிம் சா சூரி |
பின்னையவர் | அதில் சா சுரி |
இறப்பு | 1559 |
மரபு | சுர் |
அரசமரபு | சுர் |
மதம் | சுன்னி இசுலாம் |
சிக்கந்தர் ஷா சூரி (Sikandar Shah Suri) (இறப்பு 1559) சுர் வம்சத்தின் ஆறாவது ஆட்சியாளர் ஆவார். இது வட இந்தியாவின் இடைக்காலத்தின் இருந்த பிற்கால பஷ்தூன் வம்சமாகும். இவர் இப்ராகிம் சா சூரியை வீழ்த்தி தில்லியின் சுல்தானானார் .
சிக்கந்தர் சா சூரியின் உண்மையான பெயர் அகமது கான் சூரி என்பதாகும். இவர் சுல்தான் முகமது அடில் சாவின் மைத்துனர். 1555 இல் தில்லியில் இருந்து சுதந்திரத்தை அறிவிக்கும் முன் இலாகூரின் ஆளுநராக இருந்தார்.[1]
சுதந்திர சுல்தானாகி, பஞ்சாபை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு, சுல்தான் இப்ராகிம் சா சூரியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை நோக்கி இவர் அணிவகுத்துச் சென்றார். இந்தியாவின் ஆக்ராவிற்கு அருகிலுள்ள பரா என்ற இடத்தில் நடந்த போரில் இப்ராகிம் தோற்கடிக்கப்பட்டார். சிக்கந்தர், தில்லி மற்றும் ஆக்ரா இரண்டையும் கைப்பற்றினார். சிக்கந்தர் இப்ராகிமுக்கு எதிரான போராட்டத்தில் மும்முரமாக இருந்தபோது, பிப்ரவரி 1555 இல் நசிருதீன் உமாயூன் இலாகூரைக் கைப்பற்றினார். அவரது படைகளின் மற்றொரு பிரிவினர் தீபல்பூரைக் கைப்பற்றினர். அடுத்து, முகலாய இராணுவம் ஜலந்தரை ஆக்கிரமித்தது. மேலும் அவர்களின் மேம்பட்ட பிரிவு சிர்ஹிந்த் நோக்கிச் சென்றது. முகலாயர்களை எதிர்க்க சிக்கந்தர் 30,000 குதிரைகள் கொண்ட படையை அனுப்பினார். ஆனால் அவர்கள் மாச்சீவாடாவில் நடந்த போரில் முகலாய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர். சிர்ஹிந்த் பகுதி முகலாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. சிக்கந்தர், பின்னர், 80,000 குதிரைகள் கொண்ட படையை தானே தலைமை தாங்கி போரில் முகலாய இராணுவத்தை சந்தித்தார். 22 ஜூன் 1555 இல் இவர் முகலாய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், வடக்கு பஞ்சாபில் உள்ள சிவாலிக் மலைகளுக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற முகலாயர்கள் தில்லிக்கு அணிவகுத்து சென்று அதை ஆக்கிரமித்தனர். [1] The victorious Mughals marched to தில்லி and occupied it.[2]
1556 இன் பிற்பகுதியில், சிக்கந்தர் மீண்டும் ஒரு இராணுவத்தைத் திரட்டினார். முகலாய தளபதி கிசிர் கவாஜா கானை சாமியாரி பகுதியில் (தற்போது அமிர்தசரஸ் மாவட்டம் ) சந்தித்து அவரை தோற்கடித்தார். அங்கு தன்னைப் பலபடுத்திக்கொண்டு கலனூரை தனது தலைமையகமாகக் கொண்டு வரி வசூலிக்கத் தொடங்கினார். பைராம் கான் கிசிர் கவாஜா கானுக்கு உதவ கான் ஆலமை (இசுகந்தர் கான்) அனுப்பினார். இறுதியாக 7 டிசம்பர் 1556 அன்று அக்பர் மற்றும் பைராம் கானை சமாளிக்க இயலாமல் தில்லியை விட்டு வெளியேறினார். சிக்கந்தர் மீண்டும் சிவாலிக் மலைகளில் பின்வாங்கி நூர்பூர் இராச்சியத்தின் கீழ் மவு கோட்டையில் தஞ்சம் புகுந்தார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆறு மாத எதிர்ப்பிற்குப் பிறகு, சிக்கந்தர் 25 ஜூலை 1557 அன்று சரணடைந்தார்.[3] இவரது உள்ளூர் ஆதரவாளரான ராஜா பக்த் மால் பைராம் கானால் கொல்லப்பட்டார். மேலும் சிக்கந்தர் பீகாருக்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் 1559 இல் இறந்தார்