சிக்கல் சிங்காரவேலவர் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சிக்கல் சிங்காரவேலவர் கோயில் |
தமிழ்: | சிக்கல் சிங்காரவேலவர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
அமைவு: | சிக்கல் |
ஆள்கூறுகள்: | 10°45′24″N 79°47′55″E / 10.7567°N 79.7987°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிங்காரவேலன் (முருகன்) |
சிறப்பு திருவிழாக்கள்: | சூரசம்ஹாரம், கந்த சஷ்டி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்திய புராதானக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | இரண்டு 1. (நவநீதீஸ்வரர் & முருகன்) 2. விஷ்ணு |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச் செங்கட் சோழ நாயனார் |
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் (Sikkal Singara Velar Temple) என்பது தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ. கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. மேற்கேயும் அமைந்துள்ளது.[1] கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.
சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.[2]
முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு.[3]