சிக்கிம் சங்கராம் பரிசத் Sikkim Sangram Parishad सिक्किम संग्राम परिषद | |
---|---|
தலைவர் | தில் குமாரி பண்டாரி |
தொடக்கம் | 1984 |
தலைமையகம் | சங்கராம் பவனம், கேங்டாக், சிக்கிம் |
கொள்கை | முற்போக்கு சனநாயகம் |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (சிக்கிம் சட்டமன்றம்) | 0 / 32 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
சிக்கிம் சங்கராம் பரிசத் (Sikkim Sangram Parishad) என்பது இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். 1979-இல், அரசியல் நிலைத்தன்மை நிலவிய பிறகு, சிக்கிம் ஜனதா பரிசத் கட்சியைச் சேர்ந்த நர் பகதூர் பண்டாரி தலைமையிலான அமைச்சகம் சிக்கிமில் அதிகாரத்தைப் பெற்றது. 1984-இல் பண்டாரி சிக்கிம் ஜனதா பரிசத்தை கலைத்து சிக்கிம் சங்கராம் பரிசத் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். சிக்கிம் சங்கராம் பரிசத் 1984 மற்றும் 1989 தேர்தல்களில் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதன் பிறகு 1999 முதல் தேர்தல்களில் வென்ற சிக்கிம் சனநாயக முன்னணியிடம் தோல்வியடைந்தது. சிக்கிம் சங்கராம் பரிசத் 2004 தேர்தலில் மாநிலச் சட்டசபையில் எந்த இடத்தையும் வெல்லவில்லை. நர் பகதூர் பண்டாரி சிக்கிம் சங்க்ராம் பரிசத்தை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து சிக்கிம் பிரதேசக் காங்கிரசு கட்சித் தலைவரானார்.
2013இல், நர் பகதூர் பண்டாரி மீண்டும் சிக்கிம் சங்கராம் பரிசத்தைப் புதுப்பித்தார்.
இந்தக் கட்சி 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றது.
ஆண்டு | மொத்த இடங்கள் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றி பெற்ற இடங்கள் | வைப்புத்தொகை இழப்பு | % வாக்குகள் | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|
1985 | 32 | 32 | 30 | 0 | 62.20 | [2] |
1989 | 32 | 32 | 32 | 0 | 70.41 | [3] |
1994 | 32 | 31 | 10 | 1 | 35.41 | [4] |
1999 | 32 | 32 | 7 | 1 | 41.88 | [5] |
2004 | 32 | 1 | 0 | 1 | 1.01 | [6] |
ஆண்டு | மொத்த இடங்கள் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றி பெற்ற இடங்கள் | வைப்புத்தொகை இழப்பு | % வாக்குகள் | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|
1985 (இடைத் தேர்தல்) | 1 | 1 | 1 | 0 | போட்டியின்றி | |
1989 | 1 | 1 | 1 | 0 | 68.52 | [7] |
1991 | 1 | 1 | 1 | 0 | 90.12 | [8] |
1996 | 1 | 1 | 0 | 0 | 24.50 | [9] |
1999 | 1 | 1 | 0 | 0 | 42.15 | [10] |
2004 | 1 | 1 | 0 | 1 | 1.46 | [11] |
Bhandari came out with a new state political outfit called SSP with his own red and white flag and an elephant as its election symbol in 1984