சிங்கப்பூரில் போக்குவரத்து
என்பது என்பது பெரும்பாலும் தரைவழியாலேயே நடைபெறுகின்றது. சிங்கப்பூரின் பெரும்பாலான பாகங்களை தரைவழியாக அணுகமுடியும். செந்தோசாத் தீவு மற்றும் சூராங் தீவு போன்றவற்றையும் தரைவழியாக அணுகலாம். சிங்கப்பூரின் அடுத்த பெரிய போக்குவரத்து சாதனம் தொடர்வண்டி. சிங்கப்பூரின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் தொடர்வண்டிச் சேவையை மேற்கொள்கிறது. சிங்கப்பூர் தீவானது மற்றைய தீவுகளுடன் பயணிகள் படகுச் சேவையால் இணைக்கப்பட்டுள்ளது.
உலகநாடுகளுடன் சிங்கப்பூருக்கு போக்குவரத்து தொடர்புகள் இருக்கின்றன. மலேசியாவையும் சிங்கப்பூரையும் இரண்டு பாலங்கள் இணைக்கின்றன. ஆசியாவின் முக்கியமான வான்வழி மையமாக சிங்கப்பூர் விளங்குகின்றது.
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் மனிதவலுவால் இயங்கும் ரிக்சாக்கள் பயன்பாட்டில் இருந்தன. இவையே சிங்கப்பூரின் நகர மக்களின் போக்குவரத்தில் முக்கிய இடம்பிடித்தன. அதன்பின்னர் துவிச்சக்கர வண்டி இணைந்தது போன்ற தோற்றம் கொண்ட முச்சில்லு ரிக்சாக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1980 ஆம் ஆண்டுகளின் பின்னர் இவையும் வழக்கொழிந்துவிட்டன. ஆனாலும் சிங்கப்பூரில் இன்னும் எஞ்சியிருக்கும் இவ்வகை ரிக்சாக்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. சுற்றுலாப்பயணிகள் சிங்கப்பூர் புறநகர்ப் பகுதிகளை ரிக்சாவில் சென்று கண்டுகளிகின்றனர்.
சிங்கப்பூர் வீதிகளே நகரங்களை இணைக்கின்றன. சனத்தொகை மிகுதியாக உள்ள இடங்களுக்கு வீதிகளை அமைப்பதில் நவீன தொழினுட்பங்கள் பலவும் பயன்படுத்தப்பட்ட்டுள்ளன.
மொத்த சனத்தொகை: 973,004 (as of 2014)[2]
சிங்கப்பூரின் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபையே வீதி வலையமைப்புகளை திட்டமிட்டு கட்டமைத்துப் பராமரிக்கிறது. புறநகர்களில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து புறநகர்களுக்கும் குறுகிய பாதைகள் மூலமாக விரைவான போக்குவரத்தை ஏற்படுத்துவதே அதிவேகப்பாதைகளின் நோக்கமாகும். சிங்கப்பூரின் அதிவேகப்பாதைகளாவன:
சிங்கப்பூர் கம்பிவட ஊர்தியே சிங்கப்பூரின் ஒரே கம்பிவட ஊர்தியாகும். சிங்கப்பூர்த்தீவின் பேவர் எனும் இடத்தில் இருந்து செந்தோசாத் தீவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. என்னொருவகையாகச் சொல்லப்போனால் சுற்றுலாப்பயணிகளை கவர்வதே நோக்கமாகும்.
சிங்கப்பூர் ஆற்றிடையேயான படகுச்சேவை மட்டுமே சிங்கப்பூருக்குள் உள்ள நீர்வழிப் போக்குவரத்தாகும். இந்தச்சேவை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5] தினமும் மரினா சவுத் பியரில் இருந்து குசு தீவு மற்றும் புனித ஜான் தீவு போன்ற தென் தீவுகளுக்கு பயணிகள் படகுச்சேவை இயங்குகிறது.[6]
சிங்கப்பூரானது மற்றைய நாடுகளுடன் தரை, கடல் மற்றும் வான் வழியாக போக்குவரத்துத் தொடர்புகளைப் பேணுகின்றது.
மலேசியாவுடன் இரண்டு தரைவழி இணைப்புக்களை சிங்கப்பூர் கொண்டிருக்கின்றது. ஜோகூர்-சிங்கப்பூர் தரைப்பாலம், 1920 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. மலேசியாவின் ஜோகூரின் ஜோகூர் பாரையும் சிங்கப்பூரின் வூட்லாண்ட்சையும் இணைத்துக் கட்டப்பட்ட இது ஒரு வீதியையும் தண்டவாளப் பாதையொன்றையும் கொண்டது. தூவாசு இரண்டாம் இணைப்புப்பாலமானது சிங்கப்பூரின் தூவாசையும் மலேசியாவின் தஞ்சுங் குபாங்கையும் இணைத்து 1966ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுக்கு படகுச்சேவைகளும் சிங்கப்பூரிலிருந்து இருக்கின்றன. இந்த சேவைகளை சங்கி படகுத்துறை, தனா மெரா படகுத்துறை போன்ற படகுத்துறைகளிலே பெற்றுக்கொள்ளலாம்.