வகை | பொது நிதி[1] தன்னாட்சிப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2005 |
நிதிக் கொடை | S$101.60 மில்.[2] |
வேந்தர் | முனை. அலீன் வொங் |
தலைவர் | பேரா. சியோங் கீ கியாத் |
கல்வி பணியாளர் | 921 |
நிருவாகப் பணியாளர் | 225 |
மாணவர்கள் | 13,369 |
பட்ட மாணவர்கள் | 11,115 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,254 |
அமைவிடம் | கிளெமென்டி , 1°19′45″N 103°46′35″E / 1.32917°N 103.77639°E |
வளாகம் | 9.2 எக்டேர்கள் |
நிறங்கள் | Red and Blue |
சேர்ப்பு | பல்கலைக்கழகங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு |
இணையதளம் | www.suss.edu.sg |
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (Singapore University of Social Sciences)- SUSS என்பது சிங்கப்பூர் கல்வித் திணைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் வாழ்நாள் கற்றலை(Lifelong Learning) முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலைத் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தில்(B.A. Tamil Language and Literature) பட்டப் படிப்பு வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக்கழகம் 2006 ஆம் ஆண்டு முதல் இளங்கலைத் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டப்படிப்பை வழங்குகிறது. இங்குப் பட்டம் பெற்ற மாணவர்கள் ஆசிரியர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிகிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் முதன்மைபெறும் ஆறு மாணவர்களுக்குத் தினகரன் அவர்களின் நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பில் சேருவதற்கு ஆர்வம் கொண்டவர்கள் ஆண்டில் ஒரு முறை(ஜூலை கல்வியாண்டு)தான் சேரமுடியும். ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.