சிங்கோலி Singoli | |
---|---|
தாலுகா | |
ஆள்கூறுகள்: 24°58′N 75°18′E / 24.97°N 75.3°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | நீமச் மாவட்டம் |
ஏற்றம் | 363 m (1,191 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 8,307 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 458228 |
தொலைபேசிக் குறியீடு | 917420 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-எம்.பி |
வாகனப் பதிவு | ம.பி.-44 |
சிங்கோலி (Singoli) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமச்சு மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் மற்றும் நகரப் பஞ்சாயத்து ஆகும்.
சிங்கோலி கிராமம் 24°58′ வ 75°18′ கி என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 363 மீட்டர் (1,190 அடி) உயரத்தில் உள்ளது.[1] சிங்கோலி கிராமம் மத்தியப் பிரதேசம் மற்றும் இராசத்தான் எல்லையில் அமைந்துள்ளது.
1336 ஆம் ஆண்டில் மேவார் அம்மிர் சிங்கின் இராசபுத்திர இராணாவுக்கும் துக்ளக் இராணுவத்திற்கும் இடையே சிங்கோலி என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் அம்மிர் சிங் துக்ளக் இராணுவத்தை தோற்கடித்து முகமது பின் துக்ளக்கை சிறைபிடித்தார்.[2]
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[3] சிங்கோலியின் மக்கள் தொகை 8,307 ஆக இருந்தது, ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.[3] மக்கள் தொகையில் ஆண்கள் 51% ஆகவும், பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். சிங்கோலியின் சராசரி கல்வியறிவு விகிதம் 65% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும் . கல்வியறிவில் ஆண்களின் கல்வியறிவு 76% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 53% ஆகவும் உள்ளது. சிங்கோலியில் உள்ள மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதிற்குட்பட்டவர்களாவர்.
சிங்கோலியில் இந்தியில் பெயரிடப்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என ஒன்றும் சரசுவதி சிசு மந்திர் என்ற ஒன்றுமாக இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.