சிட்லப்பாக்கம் | |
---|---|
சென்னையின் புறநகர்ப் பகுதி | |
![]() | |
சிட்லப்பாக்கம் (சென்னை) | |
ஆள்கூறுகள்: 12°56′13″N 80°08′20″E / 12.9370°N 80.1389°E[1] | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | செங்கல்பட்டு |
புறநகர் | சென்னை |
அரசு | |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2.95 km2 (1.14 sq mi) |
ஏற்றம் | 36.71 m (120.44 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 37,987 |
• அடர்த்தி | 13,000/km2 (33,000/sq mi) |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 600059, 600064 |
வாகனப் பதிவு | TN-11 |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | தாம்பரம் |
சிட்லப்பாக்கம் (ஆங்கிலம்: Chitlapakkam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது சென்னை பெருநகரத்தை ஒட்டி வடக்குப் புறம் சுமார் 10 கி.மீ.ட்டரில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ளது. இது திருவள்ளூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர்.
3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
சிட்லப்பாக்கம் பகுதிக்கு மேற்கில் காஞ்சிபுரத்திலிருந்து 56 கி.மீ.. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 100 மீட்டர் தொலைவில் உள்ள தாம்பரம் நல ஆக்க நிலையம் ஆகும். இதனருகில் தாம்பரம் 3 கி.மீ..; பல்லாவரம் 2 கி.மீ..; செம்பாக்கம் 2 கி.மீ.. மற்றும் சோழிங்கநல்லூர் 15 கி.மீ.. தொலைவில் உள்ளன. தாம்பரம் நல ஆக்க நிலையம் என்பது சென்னையில் குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தின் இடையே உள்ளது. சென்னை புறநகர் இரயில்வேயின் தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை–விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் நல ஆக்க நிலையம் இரயில் நிலையத்தின் அருகாமையில் உள்ளது.
தேசிய தொழில்நுட்ப சித்தா தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவத்தின் முதன்மையான நிறுவனம் ஆகும்.
காசநோய் சானடோரியம் என்று பிரபலமாக அறியப்படும் தொராசிக் மருத்துவத்திற்கான அரசு மருத்துவமனை 1928 இல் தொடங்கப்பட்டது. இது கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலையில் அமைந்துள்ளது.
2.90 ச.கி.மீ.. பரப்பும், 367 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பகுதி 9,960 வீடுகளும், 37,906 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 94.23% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1001 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]
சிட்லப்பாக்கம் நகரமாவதற்கு முன், விவசாயம் சார்ந்த இடமாக இருந்தது. அப்போது இந்த ஏரியின் நீர் நீர்பாசணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அருகில் உள்ள பச்சைமலை ஏரியின் முதன்மை நீராதாரமாக இருந்தது.
1980 வரை, இந்த ஏரிக்கரை ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தது. ஏரி அருகே உள்ள பகுதிகளான செம்பாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு இந்த ஏரி பயன்பட்டது. 1980-களின் துவக்கம் வரை, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வெறும் 5 அடி ஆழத்தில் காணப்பட்டது. கோடைக்கால உச்சத்தில்கூட நிலத்தடி நீர் 10 அடிக்கு கீழே சென்றதில்லை. இவ்வாறான தண்ணீர் வசதி காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாயின. ஏரியின் சூழல் இடம் பெயரும் பறவைகள் ஈர்த்தது மற்றும் பறவை நோக்கர்களுக்கு ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.[4]
ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும்.[5] என்றாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது.[6] ஏரி பாசணத்தில் விவசாயம் செய்யப்ப்பட்ட நிலப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறிவிட்டதால் இங்கு விவசாயம் இல்லாமல் போனது. இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.[7] இதனால் சென்னையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஏரியின் நீர்மட்டம் இங்கு மேலேயே உள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் 2.50 முதல் 8 மீட்டர்வரை உள்ளது. நீரில் உள்ள உப்பின் அளவு 400 முதல் 900 பிபிஎம் ஆகும்.[8] ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் கூழைக்கடாக்களை பார்க்க இயலும், மேலும் ஆண்டு முழுவதும் சாம்பல் நாரை போன்ற பறவைகளைக் காணலாம்.