நூலாசிரியர் | பூர்ணசந்திர தேஜஸ்வி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
வகை | புனைகதை |
வெளியிடப்பட்டது | 1985 சாகித்ய பந்தாரா |
சிதம்பர ரகசியா (Chidambara Rahasya) என்பது பூர்ணசந்திர தேஜஸ்வி என்ற எழுத்தாளர் எழுதிய நாவலாகும். இந்த நாவல் ஒரு சிறிய இந்திய கிராமத்தின் நிலையை நகைச்சுவையாக சித்தரிக்கிறது. இந்த புத்தகத்தில் கொலை விசாரணை, சாதி அமைப்பு, வகுப்புவாத கலவரம், குருட்டு நம்பிக்கைகள், காதல் கதை, ஏலக்காய் தாவரங்கள், நட்பு, புரட்சிகர இளைஞர்கள், நில பிரபுக்கள், தீண்டத்தகாதவர்கள், கிராமத்தின் அரசியல் ஆகியவை உள்ளடங்கிய கதைப்பின்னல் உள்ளது. 2006 ஆம் ஆண்டில், கிரிஷ் கர்னாட் இந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொலைக்காட்சித் தொடரை உருவாக்கினார் [1] [2] இந்த புத்தகம் 1987 ஆம் ஆண்டில் கன்னடத்திற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றது. [3]