சித்தப்ரியா ராய் சௌத்ரி | |
---|---|
![]() | |
பிறப்பு | மதாரிபூர் மாவட்டம், வங்காளதேசம், பிரித்தானிய இந்தியா | 2 சூலை 1894
இறப்பு | 9 செப்டம்பர் 1915 பாலேஸ்வர், ஒடிசா, பிரித்தானிய இந்தியா | (அகவை 21)
இறப்பிற்கான காரணம் | தியாகம் |
தேசியம் | ![]() |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சித்தப்ரியா ராய் சௌத்ரி (Chittapriya Ray Chaudhuri ; 2 சூலை 1894 - 9 செப்டம்பர் 1915) ஓர்ரு வங்காள புரட்சியாளரும் இந்திய சுதந்திர இயக்கத்தின் உறுப்பினருமாவார்.
சித்தபிரியா ராய் சௌத்ரி 2 சூலை 1894 அன்று மதரிப்பூர் ரஜோயர் மாநிலத்திலுள்ள கலியா கிராமத்தில் ஒரு ஜமீந்தார் குடும்பத்தில், பஞ்சனன் ராய்சவுத்ரிக்கும் அவரது மனைவி சுக்தா சுந்தரி தேவிக்கும் பிறந்தார். இவரது தந்தை மதரிப்பூர் நகரத்தில் கௌரவ குற்றவியல் நடுவராக இருந்தார். சித்தப்ரியா மதரிப்பூர் சமிதியின் (கி.பி 1910) புரட்சிகர உறுப்பினரானார். முதலில் தாலியா உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் மதரிப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கமான யுகாந்தரின் இரகசிய பிரிவான மதரிப்பூர் சபையின் உறுப்பினரானார் . திசம்பர் 1913இல் முதல் பரித்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் கழித்தார். 16 பிப்ரவரி 1915 அன்று, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நாளில், சிறையில் இருந்து விடுதலையானபோது, தெருக்களில் கடமையில் இருந்த காவல் ஆய்வாளர் சுரேஷ் முகர்ஜியை சில சகாக்களின் உதவியுடன் கொன்றார். புரட்சியாளர் ஜதின் முகர்ஜியின் சக ஊழியராக, இவர் ஜெர்மனி, சப்பான், அமெரிக்கா, டச்சு இந்தியா ஆகியவற்றிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய முயன்றார்.[1] ஜெர்மனி, சப்பான், அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தினத்தில், மூத்த வங்காள புரட்சியாளர் ஜதீந்திரநாத் முகர்ஜி என்ற பாகாஜதினுடன் இணைந்தார். மனோரஞ்சன் சென்குப்தா, நிரஞ்சன்தாஸ்குப்தா, ஜோதிஷ்சந்திர பால் ஆகியோர் ஒடிசாவின் பாலேஸ்வருக்கு தங்கள் தலைவர் ஜதீந்திரநாத் முகர்ஜியுடன் ஜெர்மன் கப்பலான மேவரிக் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றனர்.[2]
காவலர்களுக்கு இவர்களின் மறைவிடத்தைப் பற்றிய ஒரு துப்பு கிடைத்தது அவர்கள் பாலேசுவரின் கப்டிபடா என்ற கிராமத்தில் சோதனை நடத்தினர். 9 செப்டம்பர் 1915 அன்று காவலர்கள் இவர்களை கொள்ளைக்காரர்களாக அறிவித்தனர். இவரும் மற்றவர்களும் ஜதீந்திரநாத்தை தங்களிடமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரினர். ஆனால் ஜதீன் மறுத்துவிட்டார். இவர்கள் அனைவரும் புரிபாலம் ஆற்றங்கரையில் போராட முடிவு செய்தனர்.[3] எழுபத்தைந்து நிமிட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு ராய் சௌத்ரி ஒரு குண்டடிப் பட்டு இறந்தார்.[4]