சித்தார்த்த பாசு

சித்தார்த்த பாசு
பிறப்பு28 திசம்பர் 1954 (அகவை 70)
கொல்கத்தா
படித்த இடங்கள்
பணிTelevision producer

சித்தார்த்த பாசு என்பவர் இந்தியத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் வினா விடை நிகழ்ச்சி நடத்தும் ஆசிரியர் ஆவார்.[1] இந்தி, மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிக் சைனர்ஜி மீடியா என்ற ஒரு குழுமத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

இளமைக்காலம்

[தொகு]

சித்தார்த்த பாசு கொல்கத்தாவில் பிறந்தார். மும்பை, தில்லி, சென்னை ஆகிய நகரங்களில் இவர் வளர்ந்தார். பள்ளிக் கல்வியை மும்பையிலும் தில்லியிலும் முடித்தார். சென்னையில் கேந்திரிய வித்யாலயாவிலும் இந்தியத் தொழில் நுட்ப நிலையத்திலும் பயின்றார்.

தொலைக்காட்சிப் பணி

[தொகு]

1985 இல் தூர்தர்சனில் வினா விடை நேரம் என கல்லூரி மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி நிகழ்ச்சியை நடத்தினார். தூர்தர்சன் மட்டுமல்லாது பி.பி.சி. ஸ்டார் வேர்ல்ட் ஆகிய தொலைக்காட்சிகளிலும் வினா விடை நிகழ்ச்சிகளை நடத்தினார் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில்  கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

36 வயதினிலே என்ற தமிழ்த் திரைப்படத்திலும் சில இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொது அறிவு மற்றும் வினா விடைகள் தொடர்பான நூல்கள் சில எழுதியுள்ளார்.

மேற்கோள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

http://www.thehindu.com/features/metroplus/radio-and-tv/The-mastermind/article14468983.ece