சித்தாலப்பாக்கம் | |
---|---|
சுற்றுப்பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
பெருநகரப் பகுதி | சென்னை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் குறியீடு | 600126 |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டப் பேரவைத் தொகுதி | சோளிங்கநல்லூர் |
சித்தாலப்பாக்கம் (Sithalapakkam) சென்னையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுப்புற நகர்ப்புறங்களில் ஒன்றாகும். இது மேடவாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்தாலப்பாக்கத்தை சுற்றிலும் இரு ஏரிகளும் குன்று ஒன்றும் சூழ்ந்துள்ளன. இந்தக் குன்றிலிருந்து மணலுக்கும் கற்களுக்குமெனச் சில பகுதிகள் வெட்டியெடுக்கப்படுள்ளன. சித்தாலப்பாக்கத்தில் வனப் பறவைகளைக் காண இயலும். இங்கு சில கட்டிடங்கள் வந்துள்ளபோதிலும் தார் அல்லது காங்கிறீற்று சாலைகள் அமைக்கப்படாததால் மழைக்காலத்தில் போக்குவரத்து கடினமாக உள்ளது.