சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்

ஆள்கூற்று: 9°19′22″N 78°29′12″E / 9.32278°N 78.48667°E / 9.32278; 78.48667

சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் (Chitrangudi Bird Sanctuary) என்பது  "சித்திரங்குடி கண்மாய்" எனவும் அறியப்படும் ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது 0.4763 சதுர கிலோமீட்டரகள் (0.1839 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாக 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் தாலுகாவின் சித்திரங்குடி கிராமத்திலுள்ளது. இதனருகில் கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் உள்ளது. இதன் குறிப்பிடத்தக்க அம்சம் பல நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் நாரை இனங்கள்,[1] இங்குள்ள கருவேல மரங்களில் தங்கி இருக்கும். சர்வதேச பெயர்: சித்திரங்குடி மற்றும் கஞ்சிரான்குளம் பறவை சரணாலயம், IBA குறியீடு: IN261, அடிப்படை: A1, A4i.[2]

தாவரங்கள்

[தொகு]

இங்குள்ள தாவரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகளைச் சார்ந்தது. அதில் பெரும்பாலும் கருவேலம்  மேலும் சீமைக் கருவேலம் மற்றும் பெர்முடா புல் வளருகிறது. வனவியல் தோட்ட விவசாயப் பிரிவு மூலமாக 1979 ஆம் ஆண்டில் ஒரே ஒரு கருவேல மரம்  நடப்பட்டது. இன்று அது சரணாலயத்தின் பெரும்பாலான  பகுதியை ஆக்கிரமித்துள்ளது. 

இந்த சரணாலயத்திலுள்ள குளத்தின் வெளிப்பகுதியில் புளி மரங்கள், அத்தி மரங்கள், வேப்ப மரங்கள், பூவரசு மரங்கள் பட்டு மரங்கள் (Albizzia அமரா), முருங்கை மரங்கள் மற்றும் ஆசியப் பனை ஆகியன உள்ளன. மருத்துவ தாவரங்களான துளசி மற்றும் காந்தள் ஆகியனவும் வளருகின்றன.

விலங்குகள்

[தொகு]
அச்சுறு நிலையை அன்மித்த இனமான கூழைக்கடா

அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களில்  இடம்பெயரும் நீர்ப்பறவைகள் வருகை தருகின்றன. அவற்றுள் பின்வருவன அடங்கும்: கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, குளத்து நாரை, சின்னக் கொக்கு மற்றும் பெரிய கொக்கு.

பார்வையாளர்களுக்கான தகவல்கள்

[தொகு]

இந்த சரணாலயம் ஆண்டு முழுவதும் திறந்து இருக்கும். சாலைவழிப் பயணமாக முதுகுளத்தூரிலிருந்து 4 கி. மீ.,   சாயல்குடியிலிருந்து 12 கி. மீ., ராமநாதபுரத்திலிருந்து 45 கி. மீ., மற்றும் மதுரையிலிருந்து 120 கி. மீ தொலைவிலுள்ளது. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம் பரமக்குடி இரயில் நிலையம் ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

பார்வையாளர்கள் தங்க முதுகுளத்தூரிலுள்ள பொதுப்பணித்துறை ஓய்வு விடுதி, 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவிலும், மேலும் சாயல்குடி மற்றும் பரமக்குடியில் வன ஓய்வு விடுதி உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Exotic birds flocking to Chithirangudi Sசித்திரங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்anctuary". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.
  2. BirdLife International Chitragudi and Kanjirankulam Bird Sanctuary[தொடர்பிழந்த இணைப்பு]