சித்தேஷ்வர் பிரசாத் | |
---|---|
திரிபுரா ஆளுநர் | |
பதவியில் 16 சூன் 1995 – 22 சூன் 2000 | |
முன்னையவர் | ரொமேஷ் பண்டாரி |
பின்னவர் | கிருஷ்ண மோகன் சேத் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1962-1977 | |
முன்னையவர் | கைலாசு பதி சின்ஹா |
பின்னவர் | பைரேந்திர பிரசாத் |
தொகுதி | நாலந்தா, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிந்து, நாலந்தா, பீகார், பிரித்தானிய இந்தியா | 19 சனவரி 1929
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இராஜ்குமாரி தேவி |
மூலம்: [1] |
சித்தேஷ்வர் பிரசாத் (Siddheshwar Prasad)(பிறப்பு 19 சனவரி 1929) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் பீகாரின் நாலந்தா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பீகாரில் உள்ள நாலந்தா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். சூன் 1995 முதல் சூன் 2000 வரை திரிபுரா ஆளுநராகச் செயல்பட்டார்.[1][2][3][4][5]