சித்ரா தெப் | |
---|---|
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
சித்ரா தெப் (Chitra Deb 24 நவம்பர் 1943- 1 அக்டோபர் 2017) ஒரு வங்காள புதின எழுத்தாளர் ஆவார்.
சித்ரா தெப் 1943 இல் பிரித்தானிய இந்தியாவின் பூர்னியாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். [1]
ஆனந்தபஜார் பத்ரிகாவில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார், 1980 முதல் 2004 வரை அங்கு பணியாற்றினார். ஏபிபியின் நூலகப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார். தெப் பல புத்தகங்கள மொழிபெயர்த்துள்ளார், வங்காளத்தின் சமூக மற்றும் கலாச்சார வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்து இவர் விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்
டெப் தசைக் களைப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அக்டோபர் 2, 2017 அன்று கொல்கத்தாவில் காலமானார். [2]