சித்ராம்பரி

சித்ராம்பரி கருநாடக இசையின் 66வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 66வது இராகத்தின் பெயர் சதுரங்கிணி.

இலக்கணம்

[தொகு]
சித்ராம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம23 ரி2
  • ருத்ர என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் சுத்த மத்திம மேளம் நாகாநந்தினி (30).
  • இதன் காந்தார, பஞ்சம, நிஷாத முறையே கிரக பேதத்தின் வழியாக சண்முகப்பிரியா (56), சூலினி (35), தேனுகா (09) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸ்ரீ ராம மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
கிருதி ஸாமகானலோல கோடீஸ்வர ஐயர் மிச்ர சாபு