| |||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அதிகமாக: சிங்கப்பூர் · மலேசியா · இந்தியா · சீனா (ஹாங்காங்) பிற இடங்கள்: மொரீசியஸ் · பிலிப்பைன்ஸ் · கயானா · ஜமைக்கா · திரினிடாட் டொபாகோ | |||||||
மொழி(கள்) | |||||||
ஆங்கிலம் · தமிழ் · மாண்டரின் · பிற இந்திய மொழிகள் · பிற சீன மொழிகள் | |||||||
சமயங்கள் | |||||||
இந்து சமயம் · கிறித்தவம் · பெளத்தம் · இசுலாம் | |||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||
சிங்கப்பூர் இந்தியர் · சிங்கப்பூர் சீனர் · மலேசிய இந்தியர் · மலேசிய சீனர் · சீனத்தில் இந்தியர் · இந்தியாவில் சீனர் |
சிந்தியர் (Chindians) எனப்படுவோர் இந்தியா, சீனா ஆகிய இரண்டு பின்புலங்களையும் கொண்டோர் ஆவர். அதாவது சீன இந்தியக் கலப்பினக் குழந்தைகள் சிந்தியர்கள் ஆவர். பெரும்பாலும் இத்தகைய கலப்பினத் திருமணங்கள் மலேசியா, சிங்கப்பூரில் அதிகமாக நடைபெறுகின்றன.
19ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவிற்கு சீனர்களும் இந்தியர்களும் மலேசியா, சிங்கப்பூருக்கு குடியேறினார்கள். அவர்களுக்குள் கலப்புத் திருமணங்கள் பரவலாக நடைபெற்றன.[1]
சிந்தியர்கள் சிங்கப்பூர், மலேசியா மட்டுமின்றி, இந்தியா, ஹாங்காங், மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், கயானா, ஜமைக்கா, திரினிடாட்டும் டொபாகோவும், இலங்கை ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத் தகுந்த அளவில் வாழ்கின்றனர்.
சிங்கப்பூரில் மட்டும் ஏறத்தாழ 60,000 சிந்தியர்கள் வசிப்பதாக உத்தேசிக்கப்படுகிறது [2] சிங்கப்பூரில் மட்டுமே சிந்தியர்கள் தங்கள் அடையாள அட்டையில் சீன மற்றும் இந்திய இனம் என்ற இரட்டை இன அடையாளங்களைத் தெரிவிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியப் பின்புலம் என்பது இந்தியர் மட்டுமின்றி, தெற்காசிய வம்சாவழியினரையும் சேர்த்தே குறிக்கிறது. பெரும்பாலான சிந்தியர்களுக்கு மாண்டரின் சீனமும், தமிழுமே முதல்மொழிகள். பிற இந்திய, சீன மொழிகளும் சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன. வழக்கமாக ஆங்கிலமே வீட்டின் பொது மொழியாக இருக்கும்.
மலேசிய அரசு சிந்தியர்களுக்கு தந்தைவழி இனத்தையே அடையாளமாக எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலும் ஆண்கள் இந்திய (தமிழ்) வம்சாவளியினர் ஆவர். பிரபலமான சிந்தியர்கள் ஜுவாலா கட்டா, நிகோல் டேவிட், பெர்னார்டு சந்திரன், ஜெசிந்தா அபிசேகனாதன், இந்திராணி ராஜா ஆவர்.
இவர்களில் பெரும்பான்மையினர் சிங்கப்பூரிலேயே வசிக்கின்றனர். இன ஒற்றுமை காணப்படும் சிங்கப்பூரில் தங்கள் பிள்ளை எந்த மொழியைப் படித்தாலும் பெற்றோர்கள் பிரச்சனையாக எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலானோர் சீன மொழியைப் படிப்பதாகக் கூறப்படுகிறது.
பல குடும்பங்களில் பிள்ளைகள் இந்திய, சீனப் பண்பாடுகள் இரண்டிலும் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் கலப்பினப் பின்புலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை என்றும் கூறுகின்றனர்,