சிந்தோடி லீலா | |
---|---|
![]() | |
பிறப்பு | லீலா 1943 |
இறப்பு | 21 சனவரி 2010 | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–72–73)
சிந்தோடி லீலா (Chindodi Leela) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் நாடகம் மற்றும் திரைப்பட நடிகை, எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1]
கர்நாடகாவின் தாவங்கேரில் 1943 ஆம் ஆண்டில் தொழில்முறை நாடக கலைஞர்களின் குடும்பத்தில் சிந்தோடி லீலா பிறந்தார். இவரது தந்தை சிந்தோடி வீரப்பா 1928 ஆம் ஆண்டில் கே. பி. ஆர். நாடக நிறுவனத்தை நிறுவினார்.[1] இவரது முதல் நாடகம் 8 ஆவது வயதில் இளம் சித்தராமாவாக சிவயோகி சித்தராம நாடகத்தில் இருந்தது (1951) [1]
இவர் எழுதிய அள்ளி ஊதுகி என்ற நாடகம் 10,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாடக நிகழ்ச்சிகளாக நடைபெற்றன. இதன் மூலம் இவர் தனது குடும்ப நாடக நிறுவனத்தை புதுப்பித்தார். இந்நாடகக் குழு கர்நாடகாவின் மிகப்பெரிய தொழில்முறை நாடக குழுக்களில் ஒன்றாகும்.
கிட்டூர் சென்னம்மா, காளி கோபுரா, கிருட்டிணதேவராய மற்றும் சரபஞ்சரா, புட்டனா கனகலின் சரபஞ்சரா மற்றும் தும்பிடா கோடா மற்றும் கானயோகி பஞ்சக்சரி கவாயி உள்ளிட்ட 32 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிந்தோடி லீலா நடித்துள்ளார் அடுத்தடுத்த ஆண்டுகளில் சகுந்தலா, லங்காதகானா, மாதங்கா கன்யே, ஏமரெட்டி மலம்மா, குணசாகரி, வீர பாப்ருவகானா மற்றும் பெல்லி பங்கரா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார்.[2] 2000 ஆம் ஆண்டில், தனது நாடகங்களான கிட்டுரு சென்னம்மா, திப்பு சுல்தான் மற்றும் இயக்கசோதி பசா-வேசுவரா ஆகியவற்றை விளம்பரப்படுத்த கர்நாடக அரசாங்கத்தின் உதவியுடன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார்.[1]
பார்வையற்ற இசைக்கலைஞரான பஞ்சாக்சரி கவாயி பற்றி அம்சலேகா என்ற திரைப்படத்தை தயாரித்தார். இது பல மத்திய அரசு மற்றும் மாநில விருதுகளை வென்றது. ரவீந்திரகல்கித்திராவில் உள்ள ஆர். ஜே. எசு பள்ளியில் இருந்து "அசுயா கலாகா" என்ற நாடகத்தில் இளம் குழந்தைகளை நாடகத் துறையில் வளர்த்துக் கொண்டிருந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக நாடக அகாடமியை இவர் நடத்தினார். இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், மேலும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[3]
நாடக நிறுவனமான காரி பசவ ராசேந்திராவின் (கே. பி. ஆர். ஆர். நாடக நிறுவனம்) தலைவராக உள்ளார்.[4] 1992 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எசு. பங்காரப்பா என்பவரால் நாடக அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார் [4]
சிந்தோடி லீலா மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று தனது 72 ஆவது வயதில் இறந்தார். சனவரி மாதம் 23 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்.
ஒரு நாடக ஆளுமையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக தாவங்கேரியின் புறநகரில் ஒரு சிறிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இவ்வாறு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்தப் பகுதியின் மையத்தில் சிந்தோடி லீலாவின் உயரமான சிலை உள்ளது,.பூங்காவின் குறுக்கே நிறுவப்பட்ட சிலைகள் நடிகரின் பன்முகத்தன்மையைப் பற்றி ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றன. உட்புற சுவர்களில் சிந்தோடி லீலா நடித்த புகழ்பெற்ற பாத்திரங்களின் படங்கள் உள்ளன. மேலும் வெளிப்புற விளையாட்டு வரைபடங்கள் கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, வண்ணக்கொடி ஒன்றும் நாடகத்தை சித்தரிக்கும் வகையில் பறக்கிறது.[5]