சினியோல்ச்சு Siniolchu | |
---|---|
செமு பனிப்பாறையாறு என்ற இடத்தில் இருந்து விட்டோரியோ செல்லா எடுத்த சினியோல்ச்சு படம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,888 m (22,598 அடி) |
புடைப்பு | 1,480 m (4,860 அடி) |
புவியியல் | |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1936 |
எளிய வழி | பனிப்பாறையாறு/பனி/பனிக்கட்டி ஏற்றம் |
சினியோல்ச்சு (Siniolchu) என்பது இந்திய நாட்டின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். இம்மலை 6888 மீட்டர்கள் அல்லது 22,598 அடிகள் ஓங்கி உயர்ந்து குறிப்பாக பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுகிறது. ஆங்கில நாட்டைச் சேர்ந்த மலையேறும் வல்லுநர் டக்ளசு வில்லியம் பிரெசுபீல்டு இம்மலையைக் குறித்துக் கூறுகையில், மலைகளின் கட்டமைப்பு இலக்கணத்தை வெற்றி கொண்டுள்ள ஒர் அற்புதமான மலை என்றும் உலகத்திலேயே காண்பதற்குக் கிடைத்த மிகவும் எழிலான வெண்பனி மலையென்றும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே உயரத்தில் மூன்றாவதா்வும் மாநிலத்தில் முதலாவதாக்வும் இருக்கும் கஞ்சன்சங்கா மலைக்கு அருகில் இருக்கும் பச்சை ஏரிக்கு அருகாமையில் சினியோல்ச்சு மலை அமைந்துள்ளது.
1936 ஆம் ஆண்டில் செருமன் மலையேற்ற வீரர்கள் கார்ல் வெயின் மற்றும் ஆடி கோட்நெர் ஆகியோர் உச்சிக்குச் சென்று வெற்றி கண்டனர்[1]. பின்னர் சிக்கிமின் எவரெஸ்டு மலையேற்ற வீரர் சோனம் கியாட்சோ வெற்றிகரமாக உச்சியை சென்றடைந்தார்.