சினை முட்டைத் தேர்வு (Oocyte selection) என்பது வெளிச்சோதனை முறை கருக்கட்டலின் செயல்முறையில் ஒன்றாகும். அதிக அளவில் கருக்கட்டல் வெற்றியினை மேற்கொள்ள இது உதவுகிறது. கரு தேர்வு கருவுற்ற பின் நடைபெறுவதால், சினை முட்டைத் தேர்வு கருமுட்டைத் தேர்விற்கு முந்தியது.
இம்முறையில் குரோமோசோம்கள் மதிப்பிடப்படுகிறது. மெட்டா நிலை 2ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சினை முட்டை மெட்டா நிலை 1ல் பெறப்பட்ட சினைமுட்டைகளைவிட நல்ல பலன் தருகின்றன.[1]
கருவின் புறத்தோற்றத்தின் அடிப்படையில் சினை முட்டையின் பண்பினை ஒளி அல்லது துருவப்படுத்தப்பட்ட ஒளி நுண்ணோக்கி மூலம் காணலாம். சமீபத்திய ஆய்வு வெளியீடுகளில் உருவவியல் அம்சங்களின் முன் கணிப்பு மதிப்பில் தெளிவான போக்கு இல்லை என்பதாகும். [2] சோனா பெலிசிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சில குறிப்பிட்ட தகவல்களைத் தருவதாக உள்ளன. [3]
துருவ உடல்களில் மேற்கொள்ளப்படும் மூலக்கூறு பகுப்பாய்வு, முன்கூட்டியே மரபணு பரிசோதனைகள் சில பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.[4]