சின்ன ஜமீன் |
---|
 ஒலிநாடா அட்டை |
இயக்கம் | ராஜ்கபூர் |
---|
தயாரிப்பு | கே. பாலு |
---|
கதை | ராஜ்கபூர் |
---|
இசை | இளையராஜா |
---|
நடிப்பு | கார்த்திக் சுகன்யா |
---|
ஒளிப்பதிவு | பாலமுருகன் |
---|
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
---|
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
---|
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
---|
வெளியீடு | 13 நவம்பர் 1993 (1993-11-13) |
---|
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
சின்ன ஜமீன் (Chinna Jameen) 1993 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் கதை எழுதி இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர். பி. விஸ்வம் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தான் நடிகை வினிதா அறிமுகமானார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது.[1][2][3]
- ராசய்யா (கார்த்திக்) ஒரு பரம்பரை ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர்.
- ஆனால் ராசய்யாவின் சொத்தை அபகரிப்பதற்காக அவன் தாய் மாமா ரத்னவேல் அவனை சிறுவயதிலிருந்தே அவனது சொத்துக்கும், ஜமீன் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல்.
- அவ்வூரில் பானை தயாரிக்கும் ஒரு ஏழை குயவச்சி பெண்ணிடம் ஆத்தா (காந்திமதி) ராசய்யா குழந்தையாக இருக்கும் போதே கொடுத்து ஏழ்மையான நிலையில் உலகம் தெறியாத விவரமற்ற ஒரு மனிதனாக வளர்க்க சொல்கிறார்.
- அதன் படியே அந்த வளர்ப்பு தாயாக ராசய்யாவை வெகுளிதனமான விளையாட்டு பிள்ளையாகவும் உலகம் தெறியாத மனிதனாக வளர்க்கிறார்.
- அதன் பிறகு ராசய்யா தனது குழந்தை தனமாக இருப்பதால் அவ்வூரில் இருக்கும் சிறியவர்களுடன் நட்பு கொண்டு தனது வயதையும் மீறி பழகி வருகிறான்.
- அதே நேரத்தில் ராசய்யா அந்த ஊரின் ஜமீன்தார் மற்றும் சொத்தின் அதிபதி என்பதற்காக அதிகார பூர்வமாக இருப்பதை உறுதி செய்ய அவர்களது பெற்றோர் ஒரு வழக்கறிஞர் ராஜேஷ் மூலம் பாதுகாவலராக நியமித்து வைத்திருந்தனர்.
- ஆனால் அதை ராசய்யாவின் தாய் மாமா ரத்னவேல் அவ்வப்போது வழக்கறிஞர் ராஜேஷ் ஜமீன் அரண்மனைக்கு வரும் போது மட்டும் ராசய்யாவை அலங்காரித்து ஜமீன்தார் என்பதை போல் காட்டி வந்தார்.
- அதன் பிறகு ராசய்யா பருவமடைந்த பிறகு தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருக்கும் போது அந்த ஊரில் ஆடு மெய்க்க வரும் ஜோதி வினிதா என்பவரை காதலிக்கிறார்.
- இதனை ஒரு நாள் அறிந்த ரத்னவேல் ராசய்யா-ஜோதி திருமணம் ஆகிவிட்டால் அதிகார பூர்வமாக ராசய்யா மீதுள்ள ஜமீன் சொத்துக்கள் அனைத்தும் மனைவியான ஜோதியே அனுபவிக்க நேரிடும் என்ற பயத்தால்.
- அதன் பிறகு ரத்னவேல் தனது தம்பி உதயபிரகாஷ் மற்றும் உதவியாளரைக் தளபதி தினேஷ் கொண்டு அவளை முதலில் எச்சரிக்கிறார்.
- ஆனால் ஜோதி அதற்கு கட்டுபடவில்லை அதன் பிறகு ரத்னவேல் அந்த ஊரின் தலைவர் என்ற முறையில் ஜோதியை ஊர் மக்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்து ராசய்யாவை திருமணம் செய்து கொண்டால் ஜமீன் சொத்துக்கு பங்கம் வந்துவிட கூடாது என்ற நிலையால் தனது உதவியாளரை ஏவி ஜோதியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறான் அதன் பிறகு தன்மான உணர்ச்சிக்கு கட்டுபாட்டு ஜோதி தன்னை தானே கத்தியால் குத்தி கொன்று தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
- பின்பு ஜோதியின் சகோதரியான சத்யா சுகன்யா அந்த ஊரின் கிராம அதிகாரியாக சேருகிறார்.
- அதன் பிறகு தனது அக்காவின் இறப்பிற்கு காரணமான அந்த ஊர் பெரியவர் ரத்னவேலை ராசய்யாவின் மூலம் பழி வாங்குகிறார்.
- அதன் பின்னர் ராசய்யாவை சத்யா காதலித்து ஒரு சிறந்த தெளிவான மனிதராக மாற்றுவதாக கதை அம்சம் அமைந்த திரைப்படமாக நகர்கிறது.
சின்ன ஜமீன் |
---|
|
---|
வெளியீடு | 1993 |
---|
ஒலிப்பதிவு | 1993 |
---|
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
---|
நீளம் | 29:14 |
---|
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் அடியோ |
---|
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
---|
கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]