சின்னத்தம்பி பெரியதம்பி | |
---|---|
![]() | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | தாரா சிவகுமார் கே. பத்மாவதி எம். எல். நல்லமுத்து |
கதை | மணிவண்ணன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சத்யராஜ் பிரபு நதியா சுதா சந்திரன் |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | கௌதமன் |
கலையகம் | செம்பா கிரியேசன்சு |
விநியோகம் | செம்பா கிரியேசன்சு |
வெளியீடு | 27 பிப்ரவரி 1987 [1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சின்னத்தம்பி பெரியதம்பி என்பது 1987ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில், சத்யராஜ், பிரபு, நதியா, சுதா சந்திரன், நிழல்கள் ரவி, விஜயன், காந்திமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையமைத்த இப்படத்துக்கான பாடல்களை கங்கை அமரன், வைரமுத்து, "மாதம்பட்டி"சிவகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.
கங்கை அமரன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[2] ஒரு காதல் என்பது என்ற பாடலுக்கு மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி: நொ) |
1 | "சின்னத்தம்பி பெரியதம்பி" | கங்கை அமரன் | கங்கை அமரன் | 03:40 |
2 | "என் பாட்ட கேட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:21 |
3 | "மாமன் பொண்ணுக்கு" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:09 |
4 | "மழையின் துளியிலே" | சித்ரா | வைரமுத்து | 04:21 |
5 | "ஒரு ஆல மரத்துல" | சித்ரா | மாதம்பட்டி சிவகுமார் | 04:20 |
6 | "ஒரு காதல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:49 |
7 | "யா யா" | எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் | 04:04 |
தாரா சிவகுமார், கே.பத்மாவதி, எம்.எல்.நல்லமுத்து ஆகியோர் தயாரித்த இப்படத்தின் கதையை எழுதியவர் சண்முகப்பிரியன். படத்தை இயக்கிய மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதியிருந்தார்.