சின்னாறு ஆனைமலையில் உற்பத்தியாகி வரும் ஒரு ஆறு. இது கேரள மாநிலத்தின் இடிக்கி மாவட்டத்தில் உள்ளது. 18 கி.மீ நீளமான சின்னாறு தமிழக-கேரளத்தின் ஒரு பகுதியில் எல்லையாக உள்ளது.
சோலைக்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் இந்த ஆறு கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைகிறது. தமிழக எல்லையை அடைந்ததும் இது அமராவதி ஆறு என்றழைக்கப்படுகிறது.