சிபு சோரன் (Shibu Soren) (பி) ஜனவரி 11, 1944[1] இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார்.
இவர் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவை, பதினோராவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை, பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை, பதினாறாவது மக்களவை ஆகிய மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.[2]
இவர் மக்களவைக்கு ஏழு முறை சார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார்
இவர், இவரது செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998 இல் கைது செய்யப்பட்டார்.[3] இவர் 2006 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் நிலக்கரிதுறை அமைச்சராக இருந்தார்.[4]