Sibu Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் Kerajaan Malaysia | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Berhad) | ||||||||||
சேவை புரிவது | பிந்தாங்கோர், சரிக்கே, காப்பிட், சிபு, சரவாக், கிழக்கு மலேசியா) | ||||||||||
அமைவிடம் | சிபு; சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3.048 m | ||||||||||
ஆள்கூறுகள் | 02°15′51″N 111°58′57″E / 2.26417°N 111.98250°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
|
சிபு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: SBW, ஐசிஏஓ: WBGS); (ஆங்கிலம்: Sibu Airport; மலாய்: Lapangan Terbang Sibu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சிபு நகருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[1]
இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் சிபு பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வரும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
2018-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 1,579,528. அதே வேளையில் 20,869 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. சிபு நகர மையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[2]
இந்த வானூர்தி நிலையம் மலேசியாவில் 11-ஆவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும்; சரவாக்கில் மூன்றாவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது.
ஏப்ரல் 2009-இல், சிபு வானூர்தி நிலையத்தின் முனையத் தளத்தை (Terminal Building) மேம்படுத்துவதற்காக RM 150 மில்லியன் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட முனையம் 31 ஜூலை 2012-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.[3]
சரவாக் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் மிரி வானூர்தி நிலையம் ஆகியவற்றுக்குப் பிறகு, சிபு வானூர்தி நிலையம் மூன்றாவது பெரிய வானூர்தி நிலையமாகும். மொத்த விமான நிலைய முனையத் தளத்தின் பரப்பளவு 15,240 சதுர.மீ. ஆகும்.[4]
சிபுவில் முதல் வானூர்தி நிலையம், தெக்கு (Teku) நகரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் ஒரு சாதாரண வானூர்தி நிலையமாக கட்டப்பட்டது. இருப்பினும், வானூர்தி ஓடுதளம் நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது. வானூர்தி நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 1951-இல் தொடங்கின.
தொடக்கத்தில், ஓடுபாதை 3,600 அடி நீளம்; 150 அடி அகலத்தில் கட்டப்பட்டது. முதல் வானூர்தி 1952 மே 21-ஆம் தேதி இந்த வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. 1 ஜூலை 1952 சூலை 21-ஆம் தேதி வழக்கமான சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.
மலேசியா எயர்லைன்சு (Malayan Airways) நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் சிங்கப்பூரிலிருந்து கூச்சிங், சிபு, லபுவான் ஆகிய இடங்களுக்கு தன் வானூர்திகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தியது. 1959-இல் ஓடுபாதை 4,500 அடிக்கு 150 அடியாக நீட்டிக்கப்பட்டது.[5]
புதிய வானூர்தி நிலையத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாக 1 ஜூன் 1994-இல் தொடங்கியது. அப்போது அந்த வானூர்தி நிலையம் சிபு நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தது. 31 மே 1994-இல், நான்கு மலேசியா எயர்லைன்சு வானூர்திகள் முதன் முதலாகத் தரையிறங்கின.[5]
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | ஜொகூர் பாரு,[6] கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங், சிங்கப்பூர்[7] |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர்–சிப்பாங் |
மலேசியா எயர்லைன்சு மாஸ் சுவிங்சு | பிந்துலு, மிரி, முக்கா |
மை எயர்லைன் | கோலாலம்பூர்–சிப்பாங் (18 சனவரி 2023)[8] |
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
உலக சரக்கு விமானச் சேவை (World Cargo Airlines) | கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங் |
ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
1995 | 624,738 | 2,455 | 18,905 | |||
1996 | 654,785 | 4.81 | 1,758 | ▼ 28.39 | 20,243 | 7.08 |
1997 | 631,701 | ▼ 3.53 | 1,904 | 8.30 | 19,551 | ▼ 3.42 |
1998 | 555,483 | ▼ 12.07 | 1,499 | ▼ 21.27 | 17,099 | ▼ 12.54 |
1999 | 620,830 | 11.76 | 1,745 | 16.41 | 16,096 | ▼ 5.87 |
2000 | 657,375 | 5.89 | 1,874 | 7.39 | 15,743 | ▼ 2.19 |
2001 | 725,449 | 10.36 | 2,006 | 7.04 | 16,995 | 7.95 |
2002 | 759,704 | 4.72 | 1,916 | ▼ 4.49 | 17,113 | 0.69 |
2003 | 817,687 | 7.63 | 1,701 | ▼ 11.22 | 16,885 | ▼ 1.33 |
2004 | 903,108 | 10.45 | 1,567 | ▼ 7.88 | 17,650 | 4.53 |
2005 | 920,930 | 1.97 | 1,377 | ▼ 12.13 | 17,330 | ▼ 1.81 |
2006 | 898,923 | ▼ 2.39 | 1,040 | ▼ 24.47 | 15,638 | ▼ 9.76 |
2007 | 809,955 | ▼ 9.90 | 892 | ▼ 14.23 | 12,536 | ▼ 19.84 |
2008 | 831,772 | 2.70 | 735 | ▼ 17.50 | 14,672 | 17.00 |
2009 | 939,732 | 12.98 | 856 | 16.46 | 17,449 | 18.93 |
2010 | 1,009,002 | 7.40 | 1,133 | 32.35 | 18,985 | 8.80 |
2011 | 1,133,903 | 12.29 | 1,153 | 1.77 | 18,211 | ▼ 4.08 |
2012 | 1,204,267 | 6.2 | 1,612 | 39.8 | 15,923 | ▼ 12.56 |
2013 | 1,383,887 | 14.9 | 1,413 | ▼ 12.3 | 17,196 | 8.0 |
2014 | 1,440,935 | 4.1 | 1,460 | 3.3 | 22,508 | 30.9 |
2015 | 1,454,360 | 0.9 | 1,304 | ▼ 10.7 | 21,172 | 5.9 |
2016 | 1,469,341 | 1.0 | 1,048 | ▼ 19.6 | 24,806 | 14.6 |
2017 | 1,497,412 | 1.9 | 1,285 | 22.6 | 18,598 | ▼ 25.0 |
2018 | 1,579,528 | 5.5 | 1,443 | 12.2 | 20,869 | 12.2 |
2019 | 1,750,876 | 10.9 | 1,259 | ▼ 12.8 | 16,748 | ▼ 19.7 |
2020 | 569,625 | ▼ 67.5 | 1,406 | 11.7 | 7,122 | ▼ 54.5 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[9] |
தர வரிசை |
இலக்குகள் | பயணங்கள் (வாரம்) |
வானூர்தி நிறுவனங்கள் |
---|---|---|---|
1 | கோலாலம்பூர் கோலாலம்பூர்–சிப்பாங் | 53 | ஏர் ஏசியா, மலேசியா எயர்லைன்சு |
2 | சரவாக் கூச்சிங் | 35 | ஏர் ஏசியா |
3 | சரவாக் மிரி | 28 | மாஸ் சுவிங்சு (MASwings) |
4 | சரவாக் பிந்துலு | 14 | மாஸ் சுவிங்சு (MASwings) |
4 | சபா கோத்தா கினபாலு | 14 | ஏர் ஏசியா |
6 | ஜொகூர் பாரு | 10 | ஏர் ஏசியா |
7 | சரவாக் முக்கா | 3 | மாஸ் சுவிங்சு (MASwings) |
தொடக்கம் | அடைவு | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிபு | கோலாலம்பூர் | 167,582 | 185,734 | 216,571 | 227,381 | 247,624 | 301,394 | 309,103 | 325,257 | 344,863 | 359,836 | 368,803 |
கோலாலம்பூர் | சிபு | 169,787 | 187,536 | 218,651 | 232,530 | 246,075 | 300,070 | 308,265 | 326,003 | 345,427 | 364,552 | 365,752 |
சிபு | கூச்சிங் | 35,136 | 156,361 | 167,033 | 206,421 | 215,094 | 233,064 | 239,622 | 236,735 | 226,719 | 232,813 | 260,446 |
கூச்சிங் | சிபு | 32,801 | 153,711 | 162,872 | 198,833 | 216,898 | 230,304 | 236,371 | 238,600 | 228,843 | 234,019 | 259,492 |
சிபு | மிரி | 31,926 | 32,177 | 32,318 | 4,718 | 51,570 | 53,761 | 58,522 | 50,756 | 50,778 | 45,114 | 46,510 |
மிரி | சிபு | 26,028 | 32,730 | 32,941 | 4,443 | 49,469 | 52,265 | 56,179 | 50,498 | 51,091 | 44,648 | 47,214 |
சிபு | பிந்துலு | 5,402 | 10,358 | 12,973 | 16,888 | 10,687 | 10,524 | 12,192 | 10,466 | 10,576 | 10,570 | 11,829 |
பிந்துலு | சிபு | 1,263 | 784 | 106 | 12,831 | 13,881 | 10,396 | 11,383 | 11,568 | 11,407 | 10,104 | 11,274 |
சிபு | கோத்தா கினபாலு | 18,340 | 47,365 | 40,133 | 38,319 | 35,227 | 34,961 | 35,808 | 34,993 | 34,832 | 31,986 | 30,497 |
கோத்தா கினபாலு | சிபு | 28,549 | 48,234 | 40,101 | 42,413 | 42,690 | 36,485 | 38,166 | 34,826 | 34,337 | 33,027 | 29,674 |
Source: Malaysia Airports Holdings Berhad[10] |
இடங்கள் | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிபு<->கோலாலம்பூர் | 337,369 | 373,270 | 435,222 | 459,911 | 493,699 | 601,464 | 617,368 | 651,260 | 690,290 | 724,388 | 734,555 |
சிபு<->கூச்சிங் | 67,937 | 310,072 | 329,905 | 405,254 | 431,992 | 463,368 | 475,993 | 475,335 | 455,562 | 466,832 | 519,938 |
சிபு<->மிரி | 57,954 | 64,907 | 65,259 | 9,161 | 101,039 | 106,026 | 114,701 | 101,254 | 101,869 | 89,762 | 93,724 |
சிபு<->பிந்துலு | 6,665 | 11,142 | 13,079 | 29,719 | 24,568 | 20,920 | 23,575 | 22,034 | 21,983 | 20,674 | 23,103 |
சிபு<->கோத்தா கினபாலு | 46,889 | 95,599 | 80,234 | 80,732 | 77,917 | 71,446 | 73,974 | 69,819 | 69,169 | 65,013 | 60,171 |
Source: Malaysia Airports Holdings Berhad[10] |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)