சிப்பாங் (P113) மலேசிய மக்களவை தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Sepang (113) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | சிப்பாங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | சிப்பாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சாலாக் திங்கி; சுங்கை பீலேக் டெங்கில், தஞ்சோங் சிப்பாட் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
நீக்கப்பட்ட காலம் | லங்காட் (1958) |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | அய்மான் அதிரா சாபு (Aiman Athirah Sabu) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 173,518 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 841 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
சிப்பாங் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Sepang; ஆங்கிலம்: Sepang Federal Constituency; சீனம்: 瓜拉冷岳国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P113) ஆகும்.
சிப்பாங் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து சிப்பாங் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சாலாக் திங்கி நகரம், சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 53 கி.மீ. சிரம்பான் மாநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது.
வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், சாலாக் திங்கி நகரத்தை ‘வானூர்தி நிலைய நகரம்’ (Airport City) என்றும் அழைப்பதும் உண்டு.[5]
இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சிப்பாங் மாவட்டத்தின் நிர்வாக மையம் இந்த நகரில் அமைக்கப்பட்டு உள்ளது.[6]
சிப்பாங் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி.
மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது. உலு லங்காட் மாவட்டம் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1975 சனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[7]
சிப்பாங் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லங்காட் தொகுதியில் இருந்து 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P076 | 1959–1963 | லீ சியோக் இயூ (Lee Siok Yew) |
மலேசியக் கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
மலேசிய நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P076 | 1963–1964 | லீ சியோக் இயூ (Lee Siok Yew) |
மலேசியக் கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
2-ஆவது மலேசிய மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்றம் ஒத்திவைப்பு[8][9] | |||
3-ஆவது மலேசிய மக்களவை | P076 | 1971–1973 | லீ சியோக் இயூ (Lee Siok Yew) |
மலேசியக் கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |||
4-ஆவது மலேசிய மக்களவை | P083 | 1974–1978 | சுகைமி கமாருதீன் (Suhaimi Kamaruddin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மலேசிய மக்களவை | ||||
6-ஆவது மலேசிய மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மலேசிய மக்களவை | P095 | 1986–1990 | முகமது செரீப் சஜாங் (Mohd. Sharif Jajang) | |
8-ஆவது மலேசிய மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மலேசிய மக்களவை | P102 | 1995–1999 | செரிபா நோலி சையத் உசின் (Seripah Noli Syed Hussin) | |
10-ஆவது மலேசிய மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மலேசிய மக்களவை | P113 | 2004–2008 | முகமட் சின் முகமட் (Mohd Zin Mohamed) | |
12-ஆவது மலேசிய மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மலேசிய மக்களவை | 2013–2015 | முகமட் அனிபா மைடீன் (Mohamed Hanipa Maidin) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
2015–2018 | அமாணா | |||
14-ஆவது மலேசிய மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | ||
15-ஆவது மலேசிய மக்களவை | 2022–தற்போது | அய்மான் அதிரா சாபு Aiman Athirah Sabu |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
168,039 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
139,667 | 83.10% | ▼ -2.01 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
137,955 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
289 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,423 | - | - |
பெரும்பான்மை (Majority) |
8,949 | 6.48% | ▼ -14.15 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
ராஜ் முனி சபு (Raj Munni Sabu) |
பாக்காத்தான் அரப்பான் (PH) | 56,264 | 40.78% | -10.78 ▼ | |
ரீனா அருண் (Rina Haruni) |
பெரிக்காத்தான் நேசனல் (PN) | 47,315 | 34.30% | +34.30 | |
அனுவார் பாசிரான் (Anuar Basiran) |
பாரிசான் நேசனல் (BN) | 31,097 | 22.54% | -8.38 ▼ | |
செ அசுமா இப்ராகிம் (Che Asmah Ibrahim) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
2,337 | 1.69% | +1.69 | |
முகமட் சாருல் அம்ரி (Mohd Syahrul Amri Mat Sari) |
சுயேச்சை | 319 | 0.23% | +0.23 | |
முகமட் டாவுட் லியோங் அப்துல்லா (Mohd Daud Leong Abdullah) |
மக்கள் முதன்மைக் கட்சி (Parti Utama Rakyat) |
264 | 0.19% | +0.19 | |
முனீசுவரன் முத்தையா (Muneswaran Muthiah) |
சுயேச்சை | 194 | 0.14% | +0.14 | |
நாகாசுவரன் ரவி (Nageswaran Ravi) |
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia) |
165 | 0.12% | +0.12 |