சிப்ரினசு கார்பியோ கார்பியோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சிபிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | சிப்ரினசு
|
இனம்: | சி. கார்பியோ
|
துணையினம்: | கார்பியோ
|
இருசொற் பெயரீடு | |
சிப்ரினசு கார்பியோ லின்னேயஸ், 1758[1] | |
முச்சொற் பெயரீடு | |
சிப்ரினசு கார்பியோ கார்பியோ |
சிப்ரினசு கார்பியோ கார்பியோ (Cyprinus carpio carpio) என்பது ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் பொதுவான கெண்டை மீன் சிற்றினத்தின் துணையினமாகும்.[2] இவை ஐரோப்பாவின் பெரும்பகுதியை (குறிப்பாக தன்யூபு ஆறு மற்றும் வோல்கா ஆறு ) தாயகமாகக் கொண்டவை. காக்கேசியா மற்றும் மத்திய ஆசியாவிலும் காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ஆய்வில் சி. கார்பியோ கார்பியோ மற்றும் சி. ருப்ரோபசுகசு இடையே வேறுபாடு காணப்படுகிறது.[3] இவை ஓர் அனைத்துண்ணி. வகையின. மெல்லுடலிகள் , பூச்சிகள், ஓடுடைய காணுக்காலிகள் மற்றும் விதைகளை உணவாக உண்கின்றன.[4] இருண்ட நிறத்திலிருந்தாலும், சில காட்டுப்பகுதியில் பிடிக்கப்பட்ட மாதிரிகள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன (சில வளர்க்கப்பட்ட மீன்கள் ஆறுகளில் வெளியிடப்படுகின்றன). இந்த துணையினம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய குளங்களில் வளர்க்கப்படுகிறது.[5] பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களில் இவை இயற்கையான இனமாக கருதப்படுகின்றன.