சிம்பாங் ரெங்கம் (P151) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Simpang Renggam (P151) Federal Constituency in Johor | |
சிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி (P151 Simpang Renggam) | |
மாவட்டம் | குளுவாங் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 59,033 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சிம்பாங் ரெங்கம் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சிம்பாங் ரெங்கம்; ரெங்கம் |
பரப்பளவு | 751 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அசுனி முகமட் (Hasni Mohammad) |
மக்கள் தொகை | 76,286 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Simpang Renggam; ஆங்கிலம்: Simpang Renggam Federal Constituency; சீனம்: 新邦令金国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P151) ஆகும்.[5]
சிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து சிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
குளுவாங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமும் குளுவாங் நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சிம்பாங் ரெங்கம் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P151 | 2004–2008 | கெர் சூ திங் (Kerk Choo Ting) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | லியாங் தெக் மிங் (Liang Teck Meng) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | மஸ்லீ மாலிக் (Maszlee Malik) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020 | பெர்சத்து | |||
சுயேச்சை | ||||
2020–2021 | ||||
2021–2022 | பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அசுனி முகமட் (Hasni Mohammad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அசுனி முகமட் (Hasni Mohammad) | பாரிசான் நேசனல் | 18,312 | 41.49 | 0.20 | |
மஸ்லீ மாலிக் (Maszlee Malik) | பாக்காத்தான் அரப்பான் | 16,491 | 37.37 | 13.31 ▼ | |
முகமட் பசுருல் காமட் (Mohd Fazrul Kamat) | பெரிக்காத்தான் நேசனல் | 9,077 | 20.57 | 20.57 | |
கமல் குஸ்மின் (Kamal Kusmin) | தாயக இயக்கம் | 251 | 0.57 | 0.57 | |
மொத்தம் | 44,131 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 44,131 | 98.50 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 670 | 1.50 | |||
மொத்த வாக்குகள் | 44,801 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 59,033 | 74.76 | 8.64 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)