சார்பு | சிம்பாப்வே துடுப்பாட்ட வாரியம் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||
தலைவர் | Mary-Anne Musonda | ||||||||||||
பயிற்றுநர் | Zoe Goss | ||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||
ஐசிசி நிலை | (1981) வாழ்நாள் உறுப்பினர் (1992) | ||||||||||||
ஐசிசி மண்டலம் | ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்கம் | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் | |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 3 | ||||||||||||
சிறந்த பெறுபேறு | 5ஆவது (2008) | ||||||||||||
பெண்கள் பன்னாட்டு இருபது20 | |||||||||||||
| |||||||||||||
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 2 | ||||||||||||
சிறந்த பெறுபேறு | 3ஆவது | ||||||||||||
இற்றை: அக்டோபர் 4, 2020 |
சிம்பாப்வே பெண்கள் துடுப்பாட்ட அணி (Zimbabwe women's national cricket team) பன்னாட்டு அளவில் பெண்கள் துடுப்பாட்டப் போட்டிகளில் சிம்பாப்வேவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணியை பன்னட்டுத் துடுப்பாட்ட அவையின் வாழ்நாள் உறுப்பினரான சிம்பாப்வே துடுப்பாட்ட வாரியம் நிர்வகிக்கிறது.
2006 ஆம் ஆண்டில் பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்க பிராந்திய தகுதிச் சுற்றில் சிம்பாப்வே சர்வதேச அளவில் அறிமுகமானது. [4] அந்த போட்டியை வென்றதன் மூலம், அந்த அணி 2008 உலகக் கோப்பை தகுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, இறுதியில் இருந்த எட்டு அணிகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, 2011 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில், சிம்பாப்வே ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. [5] 2013 உலக இருபது -20 தகுதிப் போட்டியில் அணி எட்டு அணிகளில் ஆறாவது இடத்தைப் பிடித்தது, 2015 உலகக் கிண்ணத் தொடரில் இந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது, 2016 உலக இருபது -20 போட்டித் தொடருக்குத் தகுதிபெறவில்லை. [6]
டிசம்பர் 2018 இல், சிப்போ முகேரிக்கு பதிலாக மேரி-அன்னே முசொண்டா அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டார். [7] [8]
2020 டிசம்பரில், ஐ.சி.சி 2023 ஐ.சி.சி மகளிர் இ 20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளை அறிவித்தது. [9] 2021 ஐ.சி.சி பெண்கள இ20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பத்து அணிகளுடன் சிம்பாப்வேயும் இடம்பெற்றது. [10]