தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஷிம்ரோன் ஒடிலோன் ஹெட்மையர் | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 26 திசம்பர் 1996 கம்பர்லேண்ட், கயானா | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை நேர் விலகு | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 310) | 21 ஏப்ரல் 2017 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 183) | 20 டிசம்பர் 2017 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 69) | 1 சனவரி 2018 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போது | கயானா | |||||||||||||||||||||||||||||||||||
2016–தற்போது | கயானா அமேசான் வாரியர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
2019 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 15 டிசம்பர் 2019 |
சிம்ரோன் ஒடிலோன் ஹெட்மையர் (Shimron Odilon Hetmyer, பிறப்பு: டிசம்பர் 26, 1996) என்பவர் கயனீயத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில்மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுகிறார்.[1] 2014 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். டிசம்பர் 2015 இல் இவர் 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பை 2016க்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். [2] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) 2018ஆம் ஆண்டில் ஆண்கள் துடுப்பாட்டத்தின் ஐந்து சிறந்த அடையாளங்களில் ஒருவராக ஹெட்மையரை பெயரிட்டது. [3]
கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக 2016 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) இருபது-20 (இ20) போட்டிகளில் அறிமுகமானார், மேலும் 2017 பதிப்பிற்காக தக்கவைக்கப்பட்டார். [4] ஆகஸ்ட் 2018இல், ஜமைக்கா தல்லாவாஸுக்கு எதிராக கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக 100 ஓட்டங்கள் எடுத்தபோது, சிபிஎல்லில் நூறு அடித்த இளம்வயது மட்டையாளர் ஆனார். [5]
அக்டோபர் 2018இல், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் துடுப்பாட்ட வாரியம்) இவருக்கு 2018–19 பருவத்திற்கான சிவப்புப் பந்து ஒப்பந்தத்தை வழங்கியது. [6] [7]
டிசம்பர் 2018இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியது.[8][9] மார்ச் 2019இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கவனிக்க வேண்டிய எட்டு வீரர்களில் ஒருவராக இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.[10] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விடுவித்தது. [11]
19 வயதிற்குட்பட்ட மட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்காளதேசத்தில் 2016ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் வெற்றியைப் பெற்றார். அத்தொடரில் இரண்டு அரைநூறுகள் அடித்து அணிக்கு பங்களித்திருந்தார். [12]
ஏப்ரல் 2017இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் தேர்வு அணியில் இவர் இடம்பெற்றார். [13] ஏப்ரல் 21, 2017 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளுக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார். [14]
டிசம்பர் 2017இல், இவர் நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார். 20 டிசம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். [15] அத்துடன் அவர் நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். 1 ஜனவரி 2018 அன்று நியூசிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகளுக்காக தனது இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.
6 மார்ச் 2018 அன்று, 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பை தகுதிச்சுற்றில், ஹராரேவில் உள்ள ஓல்ட் ஹாராரியன்ஸ் மைதானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் நூறை அடித்தார்.[16][17][18]. ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓட்டங்களால் வென்றது. ஆட்ட நாயகனாக ஹெட்மையர் தேர்வு செய்யப்பட்டார். [19]
பிப்ரவரி 2019இல், ஹெட்மையர் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் மட்டையாளர் ஒருவரின் அதிவேக நூறை அடித்தார் (82 பந்துகளில்).[20]
ஏப்ரல் 2019இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றார். [21] [22] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) துடுப்பாட்ட உலகக் கோப்பையில் அறிமுகமான ஐந்து அற்புதமான திறமையாளர்களில் ஒருவராக இவரைப் பெயரிட்டது. [23] 17 ஜூன் 2019 அன்று, வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில், ஹெட்மையர் ஒருநாள் போட்டிகளில் தனது 1,000வது ஓட்டத்தை எடுத்தார். [24]