சியாங் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
நிறுவிய ஆண்டு | டிசம்பர், 2018 |
தலைமையிடம் | போலெங் |
பரப்பளவு | |
• Total | 2,919 km2 (1,127 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 31,920 |
• அடர்த்தி | 11/km2 (28/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://siang.nic.in/about-district/ |
சியாங் மாவட்டம் (Siang District) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் 21-வது மாவட்டமாக 2018, டிசம்பர் மாதத்தில் புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் போலெங் நகரம் ஆகும். இம்மாவட்டம், மேற்கு சியாங் மாவட்டம் மற்றும் கிழக்கு சியாங் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தில் சியாங் ஆறு பாய்வதால் இம்மாவட்ட்த்திற்கு சியாங் மாவட்டம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் கிழக்கு இமயமலையில் அமைந்துள்ளது. இது பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் சீன-திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் ருகோங், கையிங், பான்ஜிங் மற்றும் போலெங் என 4 வருவாய் வட்டங்கள் கொண்டது. இம்மாவட்டம் ருகோங்-கையிங் மற்றும் பான்ஜிங்-போலெங் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.