சியாமா சரண் சுக்லா

சியாமா சரண் சுக்லா
இந்திய அஞ்சல் தலையில் சுக்லா, 2012-ல்
7வது முதலமைச்சர்
பதவியில்
9 திசம்பர் 1989 – 1 மார்ச் 1990
முன்னையவர்மோதிலால் வோரா
பின்னவர்சுந்தர்லால் பட்வா
பதவியில்
23 திசம்பர் 1975 – 30 ஏப்ரல் 1977
முன்னையவர்பிரகாசு சந்திரா சேதி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
26 மார்ச் 1969 – 28 சனவரி 1972
முன்னையவர்நரேஷ்சந்திர சிங்
பின்னவர்பிரகாசு சந்திரா சேதி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
 ()–2004 (2004)
முன்னையவர்சந்திர சேகர் சாகூ
பின்னவர்அஜித் ஜோகி
தொகுதிமகாசமூந்த்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1990 (1990)–1999 (1999)
முன்னையவர்புனித் ராம் சாகூ
பின்னவர்அமிதேசு சுக்லா
தொகுதிஇராஜிம்
பதவியில்
1957 (1957)–1977 (1977)
முன்னையவர்சியாம்குமாரி தேவி
பின்னவர்பவான் திவான்
தொகுதிஇராஜிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பிப்ரவரி 1925
ராய்ப்பூர், சத்தீஸ்கர், மத்திய மாகாணம் மற்றும் பேரர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 பிப்ரவரி 2007
(aged 81)
ராய்ப்பூர், சத்தீஸ்கர், சத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1957-2004)
துணைவர்
பத்மினி சுக்லா (தி. 1949)
உறவுகள்வித்தியா சரண் சுக்லா (சகோதரர்)
பிள்ளைகள்3 (அமிதேசு சுக்லா உட்பட)
பெற்றோர்இரவிசங்கர் சுக்லா (தந்தை)

சியாமா சரண் சுக்லா (Shyama Charan Shukla)(27 பிப்ரவரி 1925 – 14 பிப்ரவரி 2007)[1] ஒரு இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் மூன்று முறை மத்தியப் பிரதேச முதல்வர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சியாமா சரண் சுக்லா 27 பிப்ரவரி 1925 அன்று ராய்ப்பூரில் கன்னியாகுப்ஜா பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை இரவிசங்கர் சுக்லா ஒரு வழக்கறிஞர், மத்திய மாகாணங்கள் மற்றும் பெரரின் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தார். இவரது இளைய சகோதரர் வித்தியா சரண் சுக்லாவும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதியாகவும், மத்திய அமைச்சராகவும், மக்களவையில் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவரது மகன் அமிதேசு சுக்லா ஒரு இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி மற்றும் தற்போது சத்தீசுகரின் இராஜிம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சியாமா சரண் சுக்லா முதன்முதலில் 1957-ல் ராஜீமிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1972, 1990, 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1977-ல் இராஜீமிடம் தோற்றார்.

சுக்லா 1969-72, 1975-77 மற்றும் 1989-90 ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றினார்.[1][3]

1999-ல், சுக்லா மகாசமுண்டிலிருந்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2004 வரை பணியாற்றினார்.[3]

நினைவு

[தொகு]

2012-ல் சுக்லா படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Shyama Charan Shukla: Aristocrat by disposition". Hindustan Times. 16 February 2007 இம் மூலத்தில் இருந்து 24 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424211447/http://www.hindustantimes.com/News-Feed/NewsMartImportedStories/Shyama-Charan-Shukla-Aristocrat-by-disposition/Article1-206113.aspx. பார்த்த நாள்: 19 June 2013. 
  2. State Governments, Society for study of (1972). Journal of the society for study of state governments (in ஆங்கிலம்).
  3. 3.0 3.1 3.2 3.3 Pandit Shyama Charan Shukla. pccchhattisgarh.org

வெளி இணைப்புகள்

[தொகு]