சியாவுதீன் அப்துல் அய் தேசாய் | |
---|---|
பிறப்பு | 18 மே 1925 தண்டுகா, குசராத்து |
இறப்பு | 24 மார்ச்சு 2002 | (அகவை 76)
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம், தெகுரான் பல்கலைக்கழகம் |
சியாவுதீன் அப்துல் அய் தேசாய் ( Ziauddin Abdul Hayy Desai ) (18 மே 1925 - 24 மார்ச் 2002) இந்திய தொல்லியல் ஆய்வகத்துடன் தொடர்புடைய ஓர் இந்தியக் கல்வெட்டியல் நிபுணர் ஆவார். இவர் ஓர் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை வரலாற்றாசிரியராகவும், இந்தோ-பாரசீக உலகின் இலக்கிய அறிஞராகவும் இருந்தார். [1] [2] [3]
சியாவுதீன் தேசாய், 1925 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி குசராத்தின் தண்டுகாவில் பிறந்தார். 1948 இல் பட்டம் பெற்றார். மேலும் 1948 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் பாரசீக மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1947-1953 இல், ஓர் விரிவுரையாளராக பாரசீக மொழியைக் கற்பித்தார். 1953 ஆம் ஆண்டில், இவர் இந்தியத்தொல்லியல் துறையில் கல்வெட்டியல் உதவி கண்காணிப்பாளராக சேர்ந்தார். 1959 இல், தெகுரான் பல்கலைக்கழகத்தில் பாரசீக மொழியில் சான்றிதழ் பட்டம் பெற்றார். 1961 இல், குலாம் யஸ்தானியைத் தொடர்ந்து தொல்லியல் துறையின் கண்காணிப்பு கல்வெட்டியல் நிபுணரானார். [4]
1953 முதல் 1976 வரை, தேசாய் எபிகிராபியா இண்டிகாவிற்கு அரபு மற்றும் பாரசீக இணைப்பினைத் திருத்தினார். 1977 முதல் 1983 இல் ஓய்வு பெறும் வரை, தேசாய் தொல்லியல் துறையில் கல்வெட்டு இயக்குநராகப் பணியாற்றினார். [5]
தேசாயின் ஆராய்ச்சி ஆர்வங்களில் இந்தோ-பாரசீக இலக்கியம், இந்தோ-முஸ்லிம் கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை வரலாறு மற்றும் தனது சொந்த மாகாணமான குசராத்தின் வரலாறு ஆகியவை அடங்கும். பாரசீக மொழி மற்றும் இலக்கியத்திற்கான சிறந்த சேவைகளுக்காக (1983) இந்தியக் குடியரசுத் தலைவரின் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. எபிகிராபியா இண்டிகாவிற்கு அரபு மற்றும் பாரசீக இணைப்பிகளைத் திருத்துவதைத் தவிர, இவர் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் சுமார் 300 கட்டுரைகளையும் வெளியிட்டார். வெய்னே இ. பெக்லேவுடன் இணைந்து, பாரசீக ஆதாரங்களில் "ஷாஜகான் திட்டத்தின் வரலாறு" என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தலைமை ஆலோசகராகவும் இருந்தார். அகமதாபாத்தில் உள்ள தர்கா அஸ்ரத் பீர் முஹம்மது ஷா நூலகத்தில் அரபு, பாரசீகம் மற்றும் உருது கையெழுத்துப் பிரதிகளின் (உருதுவில்) விளக்க அட்டவணையின் ஆசிரியர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
தேசாய் 1983 இல் ஓய்வு பெற்ற பிறகு அகமதாபாத்தில் குடியேறினார். அங்கு, நீண்டகால நோயினால் 24 மார்ச் 2002 அன்று இறந்தார். [5]