சிரம்பான் (P128) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Seremban (P128) Federal Constituency in Negeri Sembilan | |
சிரம்பான் மக்களவைத் தொகுதி (P128 Seremban) | |
மாவட்டம் | சிரம்பான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 159,167 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | சிரம்பான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சிரம்பான், லெங்கெங், நீலாய், லோபாக், தெமியாங், சிக்காமட், அம்பாங்கான் |
பரப்பளவு | 493 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | அந்தோனி லோக் (Anthony Loke) |
மக்கள் தொகை | 272,520[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சிரம்பான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Seremban; ஆங்கிலம்: Seremban Federal Constituency; சீனம்: 芙蓉国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P128) ஆகும்.[5]
சிரம்பான் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து சிரம்பான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
சிரம்பான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1955 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1955-ஆம் ஆண்டில் சிரம்பான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1959 | லிம் கீ சியோங் (Lim Kee Siong) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) | |
சிரம்பான் தொகுதி நீக்கப்பட்டு சிரம்பான் பாராட், சிரம்பான் தீமோர் என பிரிக்கப்பட்டது | ||||
மலேசிய மக்களவை | ||||
சிரம்பான் தீமோர் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு சிரம்பான் தொகுதி என மறுபெயரிப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P091 | 1974–1978 | சென் மான் கின் (Chen Man Hin) |
ஜனநாயக செயல் கட்சி |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1983 | லீ சான் சூன் (Lee San Choon) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
1983–1986 | சென் மான் கின் (Chen Man Hin) |
ஜனநாயக செயல் கட்சி | ||
7-ஆவது மக்களவை | P107 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | இம் சி சோங் (Yim Chee Chong) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
9-ஆவது மக்களவை | P117 | 1995–1999 | ஓன் சூன் கிம் (Hon Choon Kim) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P128 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ஜான் பெர்னாண்டஸ் (John Fernandez) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | அந்தோனி லோக் சிரம்பான் மக்களவைத் தொகுதி | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் ((ஜனநாயக செயல் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அந்தோனி லோக் (Anthony Loke) | பாக்காத்தான் அரப்பான் | 63,920 | 51.85 | 8.60 ▼ | |
முகமட் பட்லி செ மி (Mohd Fadli Che Me) | பெரிக்காத்தான் நேசனல் | 33,076 | 26.83 | 26.83 | |
ஓங் இன் திங் (Wong Yin Ting) | பாரிசான் நேசனல் | 24,584 | 19.94 | 7.08 ▼ | |
முகமட் ஜானி இசுமாயில் (Mohamad Jani Ismail) | தாயக இயக்கம் | 1,336 | 1.08 | 1.08 | |
இசாட் லெசுலி (Izat Lesly) | சுயேச்சை | 373 | 0.30 | 0.30 | |
மொத்தம் | 1,23,289 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,23,289 | 98.85 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,440 | 1.15 | |||
மொத்த வாக்குகள் | 1,24,729 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,57,244 | 79.32 | 5.33 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)