இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உருவாக்கம் | செப்டம்பர் 2 2011 மதுரை, இந்தியா |
---|---|
தலைமையகம் |
|
வலைத்தளம் | srishtimadurai |
சிருஷ்டி மதுரை (ஆங்கில மொழி: Srishti Madurai) மதுரையில் இயங்கும் பால்புதுமையினர் மற்றும் மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும்.இதன் தனித்துவம் என்னவெனில், இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு சாரா, நிறுவனம் சாரா வட்டமாகும்.[1]
சிருஷ்டி மதுரை என்பது இயற்கை, சமூகம் மற்றும் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் நுண்ணிய தொடர்புகளில் பன்மை சார்ந்த ஒன்றுக்கொன்று தொடர்புடைய உன்னதத்தை வெளிக்காட்டும் எல்லையற்ற ஒரு பிரபஞ்ச வெளி.
"பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உருவாக்குவதே ஸ்ருஷ்டி-யின் நோக்கமாகும்" என்று இவர்கள் தமது வலைத்தளத்தில் கூறியுள்ளார்கள்.[3] ஸ்ருஷ்டி செப்டம்பர் 2 2011 மதுரையில் துவக்கப்பட்டது.மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - இளைங்கர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறது, 2012 ஜூலை 29 மதுரையின் முதல் வானவில் திருவிழா அலன் டூரிங் நினைவாக துரிங் வானவில் திருவிழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா என்று கொண்டாடப்பட்டது, ஆண், பெண் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்களுக்கு தமிழில் பெயர் சூட்டியது இந்த அமைப்பு. இவர்கள் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.[4] ஆங்கிலத்தை அடுத்து தமிழில் மட்டும் தான் ஆண், பெண் , திருனர் தவிர்த்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பாலினங்கலான பால் புதுமையருக்கு வழக்கு மொழி சொற்கள் உள்ளன இவை மற்றும் தமிழில் கோணல் கோட்பாடு , பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் மதுரை[5][6] மற்றும் ஜான் ஆவர்.
ஸ்ருஷ்டி மதுரை கல்வி பொறுப்பாட்சி குழும ஆலோசனை வாரியத்தின் கவுரவ தலைவர் அஞ்சலி கோபாலன் ஆவர். "பொதுவாக நான் இதைப் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், சிருஷ்டி நடத்திய விழாவில் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.சிருஷ்டி அமைப்பு சாராத, நிறுவனம் சாராத மாணவர்கள் வட்டம் என்பது ஒரு காரணம். உலகில் முதல் முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, திருநங்கை ரேவதி போன்றவர்களுடன் ஒரு அம்மாவாக நானும் அங்கு சென்றேன். மனநிறைவாக இருந்தது. மதுரை போன்ற ஓரிடத்தில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மதுரைக்கு முதன்முதலாக அப்போதுதான் வந்தேன். என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டது அழகிய மதுரை மாநகரம்."[7]
இக்கட்டுரை |
அகனன் - அகனள் - இருபால்சேர்க்கை - திருநங்கை (அ.அ.ஈ.தி) தொடரைச் சேர்ந்தது |
---|
பாலின திசையமைவு |
வரலாறு (en) |
பண்பாடு |
சமூக நடத்தை |
உமாதிமி |
கடந்த 2013 டிசம்பர் உச்சநீதிமன்றத்தின் இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு குறித்து வெளியான தீர்ப்பை சிருஷ்டி நடுநிலையாக பார்க்கிறது என்று மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டது மேலும் இந்த பிரச்சனையை அறிவியல்,மருத்துவம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள்மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்துதான் ஒருபால் ஈர்ப்புடையவர்கள் விஷயத்தில் தீர்வு காணப்படவேண்டும். கலாசாரம் அல்ல, அறிவியலே சட்டத் தீர்வுக்கான பின்னணியாக இருக்கவேண்டும். ஒரு தனி மனிதனுக்கு அரசு அளிக்கும் அத்தனை பாதுகாப்புகளும் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்கள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்களை அணுகவேண்டும். உச்ச நீதிமன்றம் இந்தச் சட்ட பிரிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்ற கருத்தை பிற பாலின பாலியல் அமைப்புகளிடம் இருந்து வேறுபட்ட அறிக்கையை வெளியிட்டது. [8][9][10][11]
24 டிசம்பர் 2013 சிருஷ்டி மதுரை ஒரு கல்வி பொறுப்பாட்சி குழுமமாக பதிவுசெய்யப்பட்டு தெனிந்தியாவில் முதல் முறையாக உளநிலைப் பகுப்பாய்வு, பாலினம், பாலின ஒரிங்கினைவு, மெய்யியல், யோகா உட்பட பதிமூன்று ஆராய்ச்சி பள்ளியை நிறுவி இலவச கல்வி சேவையை பல்வேறு சர்வதேச கல்வி அறிஞர்களை நியமித்து வழங்குகிறது.இதற்கான வலைதளத்தை[12][13] திருமிகு,செவாலியர் அஞ்சலி கோபாலன் மற்றும் முனைவர் பிராக எத்திங்கர்(Bracha L. Ettinger) மதுரையில் தொடங்கி வைத்தனர்.[14][15]
சிருஷ்டி மதுரை முயற்சியால் தற்போது ஆண், பெண் தவிர இந்த 25 வகைப் பாலினங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி ஃபேஸ்புக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.[16]
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்ததும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அழகியல் மற்றும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்த கோபி ஷங்கர், அதற்கான முயற்சியில் இறங்கினார்.
அப்போது விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்துள்ளது. பால்புதுமையாரான இவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துப் படிப்பில் சேர விரும்பவில்லை.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது.தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் அக்பர் சௌத்ரி, செயலாளர் பிரவின் ஆகியோரைத் தொடர்புகொண்டார் கோபி. தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வந்துவிட்ட நிலையைச் சுட்டிக்காட்டினார். நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் 3-ம் பாலினத்தவருக்கான உரிமை மறுக்கப்படுவது வேதனை தருகிறது என முறையிட்டார். பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த மாணவர் பேரவை நிர்வாகிகள், பல்கலைக்கழக கல்விக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர். அதன் பின்னரும், கோரிக்கை நிறைவேறாததால் மாணவர் பேரவை சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.அதைத் தொடர்ந்து இந்த (2015–16) கல்வியாண்டு முதல் விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண்ணைத் தவிர, பிறர் என்ற வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதன் காரணமாக,பல மாணவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.[17]
கடந்த ஏப்ரல் 24 2015 இல் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிருஷ்டி மதுரையின் நிர்வாகத்தினரை "மாற்று பாலினத்தவர் உரிமைகள் மசோதா 2014" தாக்கல் செய்ய சாட்சியாகவும், ஆதரவளிக்கவும் அழைப்பு விடுத்தார், சிருஷ்டி மதுரை சார்பில் ஐநாவின் ஆனந்தி யுவராஜ், கமாலினி முகர்ஜி மற்றும் கோபி ஷங்கர் மாநிலங்களவையில் சாட்சியாக ஆதரவு அளித்தனர்.[18]
கடந்த 2011 பாலினம் சார்ந்த பிராந்திய மொழி சொற்களை மொழியியலாளர் மற்றும் உயிரியலாளர் ஜான் மார்ஷல் , கோபி ஷங்கர் மற்றும் முனைவர் அருணாச்சலம் ஆகியோர் மதுரை அமெரிக்கன் கல்லூரி கலந்தாய்வில் உருவாக்கினர்.[19][20]
அவர்கள் தமிழில் உருவாக்கிய சொற்கள்:
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)