மாற்றுப் பெயர்கள் | சீரோட்டி |
---|---|
வகை | உணவுக்குப் பின் வழங்கப்படும் இந்திய இனிப்பு வகை |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | கர்நாடகம் , மகாராட்டிரம் மற்றும் தெலங்கானா |
முக்கிய சேர்பொருட்கள் | மைதா மாவு சர்க்கரை நெய் |
சிரோட்டி என்று அழைக்கப்படும் சிரோட்டெ கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இரவை மற்றும் தூள் சர்க்கரையுடன் செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். சில பகுதிகளில் மைதா மாவு கொண்டு செய்யப்படுகிறது. இந்த தின்பண்டம் உணவுக்குப்பின் வழங்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்த இனிப்பு பிரபலமானது. குறிப்பாக நல்கொண்டா மாவட்டங்களில் இது பரவலாக சமைக்கப்படுகிறது. இங்கு இது ஃபெனி/பெனி (Pheni/Peni) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருவிழா அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இது இனிப்பாக பரிமாறப்படுகிறது. [1]
இதன் [2] செய்முறை: பிசைந்த இரவை மாவை வட்ட வடிவில் உருட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய பின்னர் நெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் நன்கு பொறித்து தயாரிக்கப்படுகிறது. பொறித்த பின்னர் தங்க பழுப்பு நிறத்தில், பஞ்சுபோன்ற பூரியை ஒத்திருக்கிறது. பின்னர் அதில் தாராளமாக தூள் சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்த பின்னர் விருப்பப்பட்டால் அரைத்த பாதாம் மற்றும் முந்திரி விழுதினைத் தெளிப்பர்.