சிறப்பு பாதுகாப்புக் குழு | |
---|---|
சுருக்கம் | SPG |
குறிக்கோள் | துணிச்சல், அர்ப்பணிப்பு, பாதுகாப்பு |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 8 ஏப்ரல் 1985 |
பணியாளர்கள் | 3,000 படைவீரர்கள்[1] |
ஆண்டு வரவு செலவு திட்டம் | ₹592.5 (US$7.40)(2020-21)[2] |
அதிகார வரம்பு அமைப்பு | |
Federal agency (Operations jurisdiction) | இந்தியா |
International agency | இந்தியா |
நாடுகள் | இந்தியா மற்றும் வெளிநாடு[3] |
செயல்பாட்டு அதிகார வரம்பு | இந்தியா |
சட்ட அதிகார வரம்பு | As per operations jurisdiction |
ஆட்சிக் குழு | நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா) |
Constituting instrument | |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | புதுதில்லி |
துறை நிருவாகி |
|
இணையத்தளம் | |
spg |
சிறப்பு பாதுகாப்புக் குழு (Special Protection Group (SPG) இந்தியப் பிரதமர் மற்றும் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான 1988-இல் அமைக்கப்பட்ட பாதுகாப்புப் படை ஆகும்.[4][5] சிறப்பு பாதுகாப்புப் படை, இந்தியப் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மெய்காவல் படையாக செயல்படுகிறது. இந்தியத் துணை இராணுவப் படைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 வீரர்களைக் கொண்ட இப்படையானது, மூத்த இந்திய ஆட்சிப் பணி தகுதி படைத்த தலைமை இயக்குநரின் தலைமையில் இயங்குகிறது.[6] இந்திய அரசின் தலைமைச் செயலகத்தின் கீழ் இப்படையின் தலைமை இயக்குநர் செயல்படுகிறார். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
முன்னர் முன்னாள் இந்தியப் பிரதமர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படையானது திரும்பப் பெறப்பட்டு, ஆகஸ்டு 2019 முதல் Z+ பாதுகாப்பு மட்டும் வழங்கப்படுகிறது.[7]
குளிர்காலங்களில் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போதும், வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது, இந்தியப் பிரதமரை பாதுகாக்க, இப்படை வீரர்கள் மேற்கத்திய பாணியிலான உடைகள், தொலைதொடர்பு சாதனங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கருப்புக் கண்ணாடிகள் அணிவர். வெயில் காலங்களில் சபாரி உடைகள் அணிந்திருப்பர்.
இந்தியாவின் விடுதலை நாள் போது, இந்தியப் பிரதமர், செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி உரையாற்றும் போதும் மற்றும் குடியரசு நாள் அணிவகுப்பின் போதும், சிறப்பு பாதுகாப்பு வீரர்கள், காதில் தொலைதொடர்பு கருவிகளுடன், கருப்புக் கண்ணாடி அணிந்து, நெஞ்சில் குண்டு துளைக்காத உள்ளாடையும், கருப்பு சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து, தோள்பட்டையில் வெள்ளை நிறத்தில் போலீஸ் எனக்குறித்த பட்டையை அணிந்து, துப்பாக்கிகள் ஏந்தியிருப்பர்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)