சிறப்புத் திருமணச் சட்டம், 1954 | |
---|---|
சில சந்தர்ப்பங்களில் சில திருமணங்களை பதிவு செய்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும் ஒரு சிறப்பு திருமண வடிவத்தை வழங்குவதற்கான சட்டம். | |
சான்று | Act No.43 of 1954 |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | 9 அக்டோபர் 1954 |
சிறப்புத் திருமணச் சட்ட, 1954 ( Special Marriage Act, 1954) சடங்கு முறை திருமணம் அல்லது பதிவுத் திருமணம் மற்றும் திருமண முறிவு தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமக்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் 1954ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டமாகும்.[1] இச்சட்டம் எந்த வகையிலும் கிறித்தவ, இசுலாமிய மற்றும் இந்து சமய தனிச் சட்டங்களை பாதிக்காது.[2]
நீதிமன்றத் திருமணம் என்பது இரு ஆன்மாக்களின் சங்கமம் ஆகும். அங்கு சிறப்புத் திருமணச் சட்டம்-1954-ன் படி மூன்று சாட்சிகள் முன்னிலையில் திருமணப் பதிவாளர் முன் சத்தியப் பிரமாணம் செய்து, அதன்பின் நீதிமன்றத் திருமணச் சான்றிதழ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட திருமணப் பதிவாளரால் நேரடியாக வழங்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் திருமணமான நபரின் சொத்துக்கான வாரிசு அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கமான திருமணம் மற்றும் அவர்களது குழந்தைகளின் சொத்துக்கள் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்து, பௌத்த, சீக்கிய அல்லது ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் எனில், அவர்களது சொத்துக்கான வாரிசுரிமை இந்து வாரிசுச் சட்டம், 1956 மூலம் நிர்வகிக்கப்படும்.
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |status=
ignored (help); Unknown parameter |பணி=
ignored (help)CS1 maint: unfit URL (link)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)