சிறிய புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | 'ரார்செசுடெசு
|
இனம்: | ரா. சோட்டா
|
இருசொற் பெயரீடு | |
ரா. சோட்டா பிஜூ & போசுயுத், 2009 | |
வேறு பெயர்கள் | |
|
சிறிய புதர் தவளை (Raorchestes chotta, ரார்செசுடெசு சோட்டா) என்பது இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொன்முடியில் மட்டுமே காணப்படும் ஒரு தவளை சிற்றினம் ஆகும். இந்த தவளை இலையின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முட்டைகளை இடுகிறது. இவை சிறு தவளைகளாகக் குஞ்சு பொரிக்கின்றன. தலைப்பிரட்டை நிலையினை இவை தவிர்க்கின்றன.[2] இவை கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 980 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன.[3]
வகைப்பாட்டியளர் இந்தத் தவளையை இதன் சிறிய, துண்டாக்கப்பட்ட வாழிடம் காரணமாக அழிந்து வரும் இனமாக வகைப்படுத்துகின்றனர். இது இன்னும் கணிசமான சீரழிவுக்கு உட்பட்டுள்ளது. மனிதர்கள் காடுகளைத் தேயிலை மற்றும் பாக்குத் தோட்டங்களாக மாற்றுகிறார்கள். மேலும் சுற்றுலாத்துறையின் உள்கட்டமைப்பும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். தவளைகளின் வரம்பில் ஒரு பூங்கா, பொன்முடி காப்புக்காடுகள் இருந்தாலும், இந்தத் தவளையின் இனம் போதுமான பாதுகாப்பாக இல்லை.[3]
கைட்ரிடியோமைகோசிசைத் தூண்டும் பூஞ்சையான பேட்ராசோகைதிரியம் டெண்ட்ரொபேடிடிசு இந்தத் தவளையைப் பாதிக்கின்றது. ஏனெனில் இது ரோர்செசுடசு பேரினத்தில் உள்ள மற்ற தவளைகளில் காணப்பட்டது. ஆனால் இது முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை.[3]