சிறீ ரங்கா ஜெயரத்தினம் Sri Ranga Jeyaratnam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் நுவரெலியா மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சனவரி 1971 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | பிரஜைகள் முன்னணி |
முன்னாள் கல்லூரி | கொழும்புப் பல்கலைக்கழகம் |
வேலை | ஊடகவியலாளர் |
சிறீ ரங்கா ஜெயரத்தினம் (Sri Ranga Jeyaratnam, பிறப்பு: 22 சனவரி 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஊடகவியலாளரும் ஆவார். பிரஜைகள் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.[1]
சிறீ ரங்கா 1971 சனவரி 22 இல் வவுனியாவில் பிறந்தார்.[2] வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.[3] பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றார். பல்கலைக்கழகக் காற்பந்து அணியின் தலைவராக இருந்து செயற்பட்டார்.[4][5]
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் மகாராஜா நிறுவனத்தில் இணைந்து சக்தி ஏஃப். எம். வானொலியில் எரிமலை என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.[3] பின்னர் அவர் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.[1][3] இந்நிகழ்ச்சி மலையகத் தமிழ் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.[1]
சிறீ ரங்கா முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் குடும்பத்தினருடன், குறிப்பாக அவரது மகன் நாமல் ராசபக்சவுடன், மிக நெருக்கமாக இருந்து வந்தார்.'[6][7] 2005, 2006 காலப்பகுதியில், சிறீ ரங்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து பல முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.[8][9] 2006 நவம்பரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் படைத்த பின்னர், சிறீ ரங்காவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.[10][11] 2010 பெப்ரவரி 3 இல் இவர் பயணம் செய்த வாகனம் ஒன்று அட்டனில் வைத்துத் தாக்கப்பட்டது.[12]
சிறீ ரங்கா 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13][14]
{{cite web}}
: Check date values in: |date=
(help)