சிறீகாந்த் வர்மா | |
---|---|
பிறப்பு | பிலாசுப்பூர் (சத்தீசுகர்) | 18 செப்டம்பர் 1931
இறப்பு | 25 மே 1986 நியூயார்க் நகரம் | (அகவை 54)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | வீணா வர்மா |
பிள்ளைகள் | அபிசேக் வர்மா |
சிறீகாந்த் வர்மா (Shrikant Verma)(18 செப்டம்பர் 1931 - 25 மே 1986) என்பவர் இந்தியக் கவிஞர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து 1976 முதல் 1982 வரையும், 1982 முதல் 1986 வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]
வர்மா, மத்தியப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீணா வர்மாவை மணந்தார்.[2][3][4][5] இந்த இணையரின் மகன் அபிஷேக் வர்மா ஆவார். இவர் ஓர் இந்திய ஆயுத வியாபாரி மற்றும் 1997-ல் இந்தியாவின் இளைய கோடீசுவரராக அறிவிக்கப்பட்டாவர் ஆவார்.[6]
வர்மா இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபது நூல்களை எழுதியுள்ளார்.[7]
வர்மா 1976ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசிடமிருந்து ஜல்சாகர் படத்திற்காகத் துளசி சம்மான் மற்றும் 1981ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில கலா பரிசத்தில் இருந்து ஷிக்ஷா சம்மான் விருதுகளைப் பெற்றார். 1982ல், புது தில்லியில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய எழுத்தாளர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.[8] 1987-ல், இவருக்கு மரணத்திற்குப் பின் மகத் திரைப்படத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]